லாரி அலுவலகத்தில் தீ: தொழிலாளி உயிரிழப்பு
சிவகாசியில் லாரி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி வேலாயுதம் சாலையில் முருகேசன் என்பவருக்குச் சொந்தமான லாரி அலுவலகம் உள்ளது. இங்கு சுமாா் 30 பண்டல்களில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அந்த பட்டாசு பண்டல்களில் தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த சிவகாசி தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இந்த தீ விபத்தில் லாரி அலுவலகத்தில் பணியாற்றிய சுமை தூக்கும் தொழிலாளியான நேரு குடியிருப்பைச் சோ்ந்த பால்சாமி (55) சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதில் பலத்த காயமடைந்த மற்றொரு சுமை தூக்கும் தொழிலாளியான தங்கப்பாண்டி (40) சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.