செய்திகள் :

வங்கிகள் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

post image

புது தில்லி: வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரர்களை நியமிக்கும் வங்கிகள் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

தற்போது வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர், தனது நியமனதாரராக ஒருவரை மட்டுமே நியமிக்க முடியும். இதன் மூலம், வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நபர் உயிரிழந்தால், அவரின் கணக்கில் உள்ள பணத்தை நியமனதாரர் பெற முடியும்.

இந்நிலையில், வங்கிகள் சட்டத் திருத்த மசோதாவின்படி வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர், தனது நியமனதாரர்களாக 4 பேரை குறிப்பிடலாம்.

வங்கித் துறையின் நிர்வாக தரநிலைகள், வங்கிகளில் பணம் செலுத்துவோர் மற்றும் முதலீட்டாளர்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துதல், பொதுத் துறை வங்கிகளின் தணிக்கை தரத்தை மேம்படுத்துதல், கூட்டுறவு வங்கிகளின் இயக்குநர்கள் பதவிக் காலத்தை அதிகரித்தல் உள்ளிட்டவை இந்த மசோதாவின் நோக்கம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கூட்டுறவு இயக்குநர்கள் பதவிக் காலம்...: கூட்டுறவு வங்கிகளின் இயக்குநர்கள் (தலைவர் மற்றும் முழு நேர இயக்குநர் தவிர) பதவிக் காலத்தை 8 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்க மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது. மாநில கூட்டுறவு வங்கி வாரியத்தில் மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநரும் கடமையாற்ற இந்த மசோதா அனுமதிக்கிறது.

மொத்தம் 19 திருத்தங்கள்: இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது:

இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934, வங்கி ஒழுங்காற்றுச் சட்டம் 1949, பாரத ஸ்டேட் வங்கிச் சட்டம் 1955, வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றம்) சட்டம் 1970, வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல் மற்றும் பரிமாற்றம்) சட்டம் 1980 ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவர, மொத்தம் 19 திருத்தங்கள் மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளன. வங்கித் துறையை வலுப்படுத்தவும், வாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்தவும் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.

'பங்கை 26%-ஆக குறைப்பதே நோக்கம்': இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இதுதொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி பேசுகையில், 'பொதுத் துறை வங்கிகளில் மத்திய அரசின் பங்கை 51 சதவீதத்தில் இருந்து 26 சதவீதமாக குறைத்து, அந்த வங்கிகளை தனியார்மயமாக்குவதே மசோதாவின் உண்மையான நோக்கம்' என்றார்.

சிபில் புள்ளிகளால் பாதிப்பு: சமாஜவாதி எம்.பி.ராஜீவ் ராய் பேசுகையில், 'வங்கிக் கடன் சரிவர திருப்பிச் செலுத்தப்பட்டதா, இல்லையா என்பதை தெரிவிக்கும் சிபில் புள்ளிகளால் ஏழைகளும், நடுத்தர மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.

மறைமுக வங்கிகக் கட்டணம்-திமுக எம்.பி. கேள்வி: திமுக எம்.பி. ராணி ஸ்ரீகுமார் பேசுகையில், வாடிக்கையாளர்களிடம் இருந்து மறைமுகமாக வங்கிக் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதை விமர்சித்தார். ஏடிஎம் சேவைகள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு வாடிக்கையாளரிடம் இருந்து வங்கிகள் கட்டணம் வசூலிப்பதை கேள்வி எழுப்பிய அவர், முதியோர்களை குறிவைத்து நடைபெறும் இணையவழி மோசடிகளையும் சுட்டிக்காட்டினார்.

இந்திரா காந்தி குறித்த கருத்தால் வாக்குவாதம்: இந்த மசோதா மீதான விவாதத்தின்போது கடந்த 1974-ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சம்பந்தப்பட்ட நிகழ்வை பாஜக எம்.பி. சம்பித் பத்ரா குறிப்பிட்டார். இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக திமுக எம்.பி. ஆ.ராசா பேசுகையில், 'முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவையில் இல்லாதபோது அவரைக் குறித்து ஏன் பேச வேண்டும்? எந்தவொரு காரணமும் இல்லாமல் அவரின் பெயரைக் குறிப்பிட்டு, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்துவதற்கு என்ன அர்த்தம்? இது அவை விதி 94-ஐ மீறுவதாகும்' என்றார்.

இதைத்தொடர்ந்து விவாதங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசுகையில், 'வங்கிகளை பாதுகாப்பாகவும், ஸ்திரமாகவும் வைத்திருப்பதே 2014-ஆம் ஆண்டுமுதல் மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. அதற்கான திட்டங்களின் பலனை 10 ஆண்டுகள் கழித்து தற்போது அனைவராலும் பார்க்க முடிகிறது' என்றார்.

இதையடுத்து குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்: விவசாய சங்கத் தலைவர் கைது!

அரசுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ள விவசாய சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிகாய்ட் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்.விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில... மேலும் பார்க்க

தெலங்கானாவில் 55 ஆண்டுகளில் இரண்டாவது பெரிய நிலநடுக்கம்!

தெலங்கானாவில் புதன்கிழமை காலை ஏற்பட்ட நிலநடுக்கமானது கடந்த 55 ஆண்டுகளில் அப்பகுதியில் 5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இரண்டாவது பெரிய நிலநடுக்கமாகும். தேசிய நிலஅதிர்வு மையத்தின்படி, தெலங்கானாவின் முலுகு மாவட... மேலும் பார்க்க

தில்லி மின் உற்பத்தி நிலையங்களை அதானியிடம் ஒப்படைக்க அழுத்தம்! கேஜரிவால்

தில்லி முதல்வராக இருந்தபோது, மின் உற்பத்தி நிலையங்களை அதானியிடம் ஒப்படைக்க தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்தில் தில்லி சட்டப்பேரவைத்... மேலும் பார்க்க

டிஜிட்டல் மோசடி: 59,000 வாட்ஸ்-ஆப் கணக்குகள், 6.69 லட்சம் சிம் கார்டுகள் முடக்கம்!

டிஜிட்டல் கைது மோசடி குற்றச் செயல்களில் ஈடுப்பட்டதாக 59,000-க்கும் மேற்பட்ட வாட்ஸ்-ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. வாட்ஸ்-ஆப் கணக்குகள் மட்டுமல்லாது பிரபல சமூக வலைதளமான ஸ்கைப்பில் 1,700-க்கும் மேற்பட... மேலும் பார்க்க

36 வருடங்களுக்குப் பின் சிறையிலிருந்து விடுதலையான 104 வயது முதியவர்.

கொல்கத்தா: 36 வருடங்களுக்குப் பின்னர் மேற்கு வங்க மாநிலத்தின் மல்டா சிறையிலிருந்து 104 வயது முதியவர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் மல்டா மாவட்டத்தை சேர்ந்த 104 வயதான ரசிகத... மேலும் பார்க்க

மிகப்பெரிய முடிவை எடுத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி: ஏக்நாத் ஷிண்டே!

நாங்கள் இவ்வளவு பெரிய முடிவை எடுத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் என்று சிவசேனை தலைவர்(ஷிண்டே அணி) ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிர முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, இன்று காலை பாஜக எம்எல்ஏக்கள... மேலும் பார்க்க