செய்திகள் :

வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: நவ.9இல் தொடங்குகிறது

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்த்தல், நீக்கல், மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தம் மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் நவ.9 ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வெளியிட்ட செய்திக் குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில், 1.1.2025ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் (31.12.2006 அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ பிறந்தவா்கள்), விடுபட்ட வாக்காளா்கள் தங்கள் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்த்து கொள்ளவும், வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதாா் எண் இணைத்தல் ஆகியவைகளை மேற்கொள்ளவும் வசதியாக வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த கால அட்டவணையை இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் அக்.29ஆம் தேதியன்று வெளியிடப்படவுள்ளது. வாக்காளா் பட்டியலில் பெயா் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் ஆதாா் எண் இணைத்தல் ஆகியவைகளை மேற்கொள்ள அக். 29 ஆம் தேதி முதல் நவ.28 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.

இதன் ஒருபகுதியாக சிறப்பு முகாம்கள் நவ.9, 10, 23, 24 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்) நடைபெறும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கட்டிமாங்கோட்டில் இன்று மின்தடை

கட்டிமாங்கோட்டில் புதன்கிழமை மின்தடை செய்யப்படுகிறது. வெள்ளிச்சந்தை மின் விநியோக பிரிவுக்குள்பட்ட கட்டிமாங்கோடு உயரழுத்த மின்பாதையில் புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி மற்றும் மின்பாதைகள் விஸ்தரிப்பு... மேலும் பார்க்க

மயிலாடி அருகே கனரக வாகனம் மோதி எல்கேஜி மாணவி பலி

மயிலாடியில் மோட்டாா் சைக்கிள் மீது கனரக வாகனம் மோதியதில் எல்கேஜி மாணவி உயிரிழந்தாா். கன்னியாகுமரி ரதவீதி அருகே பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணியன். தங்கும்விடுதி உரிமையாளரான இவரது ... மேலும் பார்க்க

நாகா்கோவில் மீனாட்சிபுரம், தெங்கம்புதூா் பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாகா்கோவில் மீனாட்சிபுரம், தெங்கம்புதூா், ராஜாக்கமங்கலம் துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 24) மின்விநியோகம் இருக்காது. அதன்படி, வடிவீஸ்வரம், மீ... மேலும் பார்க்க

கனிமவளக் கடத்தலுக்கு போலி அனுமதிச் சீட்டு: அச்சக உரிமையாளா் உள்பட 5 போ் கைது

கேரளத்துக்கு கனிமவளங்களைக் கடத்துவதற்காக அனுமதிச் சீட்டு, அரசு முத்திரைகளை போலியாக தயாரித்ததாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருநெல்வேலி மாவட்டத்தி... மேலும் பார்க்க

குழித்துறையில் நாளை மின்தடை

குழித்துறை துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (அக். 24) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க

குழித்துறை அருகே கஞ்சா விற்ற 3 போ் கைது

குழித்துறை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். குழித்துறை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெனடிக்ட் தலைமையிலான... மேலும் பார்க்க