செய்திகள் :

விசாரணைக்கு அழைத்துச் சென்ற இளைஞர் மரணம்; இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

post image

விசாரணைக்கு அழைத்துச் சென்ற தினேஷ்குமார் என்ற இளைஞர் சந்தேகமான முறையில் மரணமடைந்த சம்பவத்தில் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் காவல் ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மரணமடைந்த தினேஷ்குமார்
மரணமடைந்த தினேஷ்குமார்

கடந்த 9 ஆம் தேதி மதுரை யாகப்பா நகர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்-முத்துலெட்சுமி தம்பதியரின் மகன் தினேஷ்குமாரை ஒரு வழக்கு விசாரணைக்காக மதுரை அண்ணாநகர் காவல் நிலைய ஆய்வாளர் பிளவர்ஷீலா தலைமையிலான காவலர்கள் வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் தினேஷ்குமார் வண்டியூர் வைகையாற்று கால்வாயிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

உயிரிழந்ததாக காவல்துறையினர் கூறியபோதும் சடலத்தை மாலை வரை பிணவறைக்கும் கொண்டு செல்லாதது ஏன் என்றும், காவல் ஆய்வாளர் ஃபிளவர்ஷீலா உள்ளிட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு மற்றும் தீண்டாமை வன்கொடுமை வழக்கும் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தினேஷ்குமாரின் உறவினர்களும் பல்வேறு அமைப்பினரும் காவல் நிலையம் அருகே போராட்டம் நடத்தி வந்தனர்.

ஆய்வாளர் ஃபிளவர் ஷீலா - மரணமடைந்த தினேஷ்குமார்

முறையான விசாரணை நடத்த வேண்டி, காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம், பி.யூ.சி.எல், புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

இதனிடையே மானகிரி செல்வக்குமார் என்பவர் இந்த சம்பவம் குறித்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரேஷ்பாபு அமர்வு "அண்ணா நகர் காவல் நிலைய சிசிடிவி முறையாக செயல்படுகிறதா? இந்த காவல் நிலைய ஆய்வாளர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், இந்த வழக்கை சம்பந்தப்பட்ட காவல் நிலையம் விசாரணை செய்தால் எப்படி நீதி கிடைக்கும்?" என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், "வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுகிறோம்" என்று உத்தரவிட்டனர்.

இந்நிலையில் காவல் ஆய்வாளர் ஃபிளவர் ஷீலாவை ஆயுதப்படைக்கு மாற்றி மதுரை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். இதனால் இந்த வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: அரசுப் பேருந்தில் சென்ற பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை; நடத்துநர் போக்சோவில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி ஒன்றில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 11 ஆம் தேதி ஒரத்தநாட்டில் உள்ள தனியார... மேலும் பார்க்க

Uttar Pradesh: சிறையில் காசோலை திருட்டு; விசாரணையில் பகீர் தகவல்; அதிகாரி, கைதிகள் சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம் அசாம்கர் மாவட்ட சிறைக்குச் சொந்தமான வங்கிக்கணக்கில் இருந்து சமீபத்தில் ரூ.2.6 லட்சம் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் எடுக்கப்பட்டு இருப்பதை சிறை அதிகாரி ஆதித்ய குமார் கண்டுபிட... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: மருத்துவ மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை - 3 பேர் கைது; காவல்துறை விசாரணை

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமைமேற்கு வங்கத்தில் அடிக்கடி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஏற்கெனவே கொல்கத்தாவில் மருத்துவக் கல்லூரி பயிற்சி டாக்டர் பால... மேலும் பார்க்க

குஜராத்: போலி சம்மன், டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.100 கோடி கொள்ளை; தந்தை, மகன் உள்பட 4 பேர் கைது

நாடு முழுவதும் அடிக்கடி `டிஜிட்டல் கைது' மூலம் சைபர் கிரிமினல் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. இதில் அதிக அளவில் பெண்கள் மற்றும் முதியவர்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழு... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: முட்டி போட மறுத்த பட்டியலின இளைஞர்; சாவியால் முதுகைக் கிழித்த மாற்றுச் சமூக இளைஞர்கள்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள திருமயிலாடி பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசன். இவரது நண்பர்கள் சரஸ்வதிவிளாகம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் அஜய். பட்டியலினத்தைச் சேர்ந்த இவர்கள் கடந்த 06.11.2... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டை: `திருமணம் மீறிய உறவில் மனைவி' - 3 குழந்தைகளை தந்தையே கொன்ற சோகம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (38). ஹோட்டலில் சர்வர் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி சரண்யா (35). (பெயர் மாற்றம் செய்யப்... மேலும் பார்க்க