செய்திகள் :

"விஜய் உயிருக்கு ஆபத்தா? விரைவில் அதிமுக - தவெக கூட்டணி அமையுமா?" - திருமாவளவன் பதில்

post image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்கள் கூட்டணியில் பல கட்சிகள் இணையும் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

அதிமுக - தவெக கூட்டணி

இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், "அதிமுக - தவெக கூட்டணி என்பது அதிமுக பரப்பும் வதந்தி. ஏற்கெனவே அவர்கள் பாஜக கூட்டணியில் இருக்கும்போது தவெக எப்படி அவர்களுடன் வந்து சேரும்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

பாஜக எங்களுடைய கொள்கை எதிரி என்று விஜய் அறிவித்திருக்கிறார். அப்படியென்றால், அதிமுக - பாஜக - தவெக ஆகிய கட்சிகள் கூட்டணியாக இருக்குமா அல்லது பாஜகவைக் கழற்றிவிட அதிமுக தயாராக இருக்கிறதா என்கிற கேள்வி எழுகிறது.

எனவே, அதிமுக தலைமை கூட்டணிக்குக் கூட நம்பத்தகுந்த கட்சியா என்கிற கேள்வி எழுகிறது" என்று பதிலளித்திருக்கிறார்.

விஜய் உயிருக்கு ஆபத்தா?

தவெக தலைவர் விஜய் உயிருக்கு ஆபத்து என்று தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

அது குறித்து திருமாவளவனிடம் கேள்வி எழுப்பியபோது, "கட்டுக்கதைகளைப் பேசுவதே அண்ணாமலையின் வாடிக்கையாக இருக்கிறது. அவர் கற்பனையாகவும், வியூகமாகவும் செய்திகளைப் பரப்பி வருகிறார். அரசியல் செய்ய வேண்டுமென்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவர் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்துகிறார்.

விஜய்
விஜய்

பாஜகவின் மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன. இருந்தும், இன்னமும் அண்ணாமலை தலைவர் என்கிற மனப்பான்மையில் பேசி வருகிறார்.

விஜய்க்கு என்ன ஆபத்து ஏற்படப்போகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. மக்கள் செல்வாக்கு உள்ள தலைவராக அவர் இயங்கிக்கொண்டிருக்கும் சூழலில், அவரது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விதத்தில் என்ன சூழல் நிலவுகிறது என்பதை அண்ணாமலைதான் விளக்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

மதுரை: ”எங்களுக்குச் சிரித்துப் பேசவும் தெரியும்; கடித்துப் பேசவும் தெரியும்” - நயினார் நாகேந்திரன்

’தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற தலைப்பில் பிரசாரப் பயணத்தை மதுரையில் இன்று தொடங்கினார் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன். மதுரை அண்ணாநகரில் இன்று நடைபெற்ற இதன் தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பாஜக... மேலும் பார்க்க

டெல்லி: ``செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்குத் தடையா?'' - தாலிபான் தரப்பு மறுப்பு

இந்தியாவிற்கு வருகை தந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி டெல்லியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்த... மேலும் பார்க்க

பிணைய கைதிகளை நாளை விடுவிக்கும் ஹமாஸ்: காஸாவிலிருந்து வெளியேற, ஆயுதங்களை கீழே போட மறுப்பு

பிணைய கைதிகள்பாலஸ்தீனத்தின் காசா நகரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே ப... மேலும் பார்க்க

பீகார் சட்டமன்றத் தேர்தல்: முதல்வராகும் வாய்ப்பு யாருக்கு? வெல்லப்போகும் கூட்டணி? - கருத்துக்கணிப்பு

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 243 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேத... மேலும் பார்க்க

`வெற்றிகரமாக முடிந்தது' - பாகிஸ்தான் தாக்குதலுக்கு பதிலடி தந்த ஆப்கானிஸ்தான்; காரணம் என்ன?

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் தாக்குதல் வெடித்துள்ளது. வியாழக்கிழமை நடந்த தாக்குதல் ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கிறது பாகிஸ்தான். கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 9), ஆப்கானிஸ்தான்... மேலும் பார்க்க

Nobel: இஸ்ரேலை ஆதரித்தவருக்கு அமைதிக்கான நோபல் பரிசா? - குவியும் கண்டனங்கள்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என வெளிப்படையாக டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனாலும் டொனால்டு ட்ரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடை... மேலும் பார்க்க