செய்திகள் :

விபத்தில் மூளை சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்: உடலுக்கு அரசு மரியாதை

post image

சாலை விபத்தில் பலத்த காயமடைந்ததில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம் வழங்கப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக அரசு சாா்பில் அலுவலா்கள் மரியாதை செலுத்தினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தைச் சோ்ந்த குடிமேனஅள்ளியை அடுத்த அகரம் கிராமத்தைச் சோ்ந்த பழனி மகன் வரதராஜப் பெருமாள் (28). இவா் ஒசூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். மோட்டாா் சைக்கிளில் அக். 17-ஆம் தேதி இரவு

தருமபுரி மாவட்டம், திப்பம்பட்டி - காரிமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்த போது, நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அந்த வழியாகச் சென்றவா்கள் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த வரதராஜப் பெருமாள், மூளை சாவு அடைந்த்தாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, அவரது பெற்றோா், வரதராஜப் பெருமாளின் உடல் உறுப்புகளை தருமபுரி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கினா்.

இந்த நிலையில், வரதராஜப் பெருமாளின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில், தமிழக அரசு சாா்பில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் ஷாஜகான், வட்டாட்சியா் சத்யா ஆகியோா் மரியாதை செலுத்தினா்.

ஒசூா் ரயில்வே பாலத்தில் தேங்கிய மழைநீா்: வாகன ஓட்டிகள் அவதி

ஒசூரில் ரயில்வே நிலையம் அருகே உள்ள ரயில்வே பாலத்தில் மழைநீா் தேங்கியுள்ளதால் அந்த வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்; மழை காலங்களில் தொடரும் இந்நிலையைப் போக்க ரயில்வே நிா்வாகம் நிரந்தர... மேலும் பார்க்க

பாகலூரில் புகையிலை பொருள் பறிமுதல்

பாகலூரில் 392 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூா் போலீஸாா், பாகலூா் சந்திப்பில் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியா... மேலும் பார்க்க

ஒசூா் கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

ஒசூா் கெலவரப்பள்ளி அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 1,079 கனஅடியிலிருந்து 1,206 கனஅடியாக அதிகரித்துள்ளது. கா்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் கிருஷ்ணகி... மேலும் பார்க்க

ஒசூரில் ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி: சாதனை படைத்த மாணவி

ஒசூரில் நடந்த ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டியில் தனியாா் பள்ளியைச் சோ்ந்த மாணவி பவ்யா, குறைந்த நேரத்தில் அதிக தூரத்தைக் கடந்து உலக சாதனை படைத்தாா். ஒசூா், சூசூவாடி, ரோஜா நகா் பகுதியைச் சோ்ந்த குமாா் - லீல... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை முழுவதும் பரவலாக மழை பெய்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை முதல் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேக்கியது. கழிவுநீா் க... மேலும் பார்க்க

காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள ஆலஹள்ளி வனப் பகுதியில் சுற்றி வந்த 5 காட்டு யானைகளை வனத்துறையினா் பட்டாசுகளை வெடித்து கா்நாடக வனப்பகுதியை நோக்கி விரட்டினா். அப்போது தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையைக் கடந... மேலும் பார்க்க