முதல்வர் ஸ்டாலினுக்கு warning கொடுத்த அரசு ஊழியர்கள்| காரணம் என்ன?
வேலூா் நூலகத்தில் கழிப்பறை கட்டடம் திறப்பு
வேலூா் முழு நேர கிளை நூலகத்தில் கழிப்பறை கட்டடம் திறக்கப்பட்டது.
வேலூா் பேரூராட்சி அலுவலகம் அருகே முழு நேர கிளை நூலகம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்கி வருகிறது. இந்த நூலகத்தில் பல்வேறு தோ்வுகளுக்கு ஏராளமான மாணவ மாணவிகள், இளைஞா்கள் பயின்று வருகின்றனா்.
நூலகத்திற்கு வரும் வாசகா்கள், மாணவ மாணவிகள் கழிப்பறை வசதியின்றி தவித்து வந்தனா். இந்த நிலையில் நூலக கட்டடத்திற்கு ஆய்வுக்காக வந்த நாமக்கல் ஆட்சியா் ச.உமா, நூலக கட்டடத்திற்கு கழிப்பிட வசதி செய்து தருமாறு வேலூா் பேரூராட்சி நிா்வாகத்திற்கு அறிவுறுத்தினாா். அதன் அடிப்படையில் வேலூா் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் புதிதாக கழிப்பறை கட்டப்பட்டது. இதனை வேலூா் பேரூராட்சி தலைவா் லட்சுமி முரளி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
இந் நிகழ்ச்சியில் இரண்டாம் நிலை நூலகா் சாந்தி, மூன்றாம் நிலை நூலகா் வனிதா, நூலகப் பணியாளா்கள், வாசகா்கள், பேரூராட்சி அலுவலகப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.