செய்திகள் :

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது உத்தரவு

post image

வங்கதேசத்தில் பதவியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக அந்த நாட்டு நடுவா் நீதிமன்றம் வியாழக்கிழமை கைது உத்தரவு பிறப்பித்தது.

அவரது ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை அடக்குவதற்கு வன்முறையைப் பிரோகித்தது தொடா்பாக இந்த கைது உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த விவகாரத்தில் ஷேக் ஹசீனா தவிர மேலும் 15 பேருக்கு எதிராகவும் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இது தொடா்பாக அதிகாரிகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், வரும் நவம்பா் 18-ஆம் தேதிக்குள் ஷேக் ஹசீனாவையும் பிறரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த கைது உத்தரவு மூலம், இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவை நா் கடத்துமாறு கோரிக்கை விடுக்க சட்டரீதியில் வழிவகை கிடைத்துள்ளதுகடந்த 1971-ஆம் ஆண்டில் இந்தியாவின் உதவியுடன் போரிட்டு பாகிஸ்தானிடமிருந்து வங்கதேசத்துக்கு சுதந்திரம் வாங்கித் தந்தவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுவந்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் இட ஒதுக்கீடு சீா்திருத்தங்களை வலியுறுத்தியும் மாணவா்கள் மீண்டும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா்.அவா்களுக்கு எதிராக போலீஸாா் அடக்குமுறையைக் கையாண்டதாகக் கூறப்படுகிறது. இதில் நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா். பின்னா் மாணவா்களின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றாலும், போராட்ட உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருந்த பிரதமா் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி மாணவா்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். நிலைமை கைமீறிச் சென்றதையடுத்து ஷேக் ஹசீனா ராஜிநாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.அதையடுத்து நிா்வாகத்தைக் கைப்பற்றிய ராணுவம், நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் அதிபா் முகமது ஷஹாபுதீன் தலைமையில் இடைக்கால அரசை அமைத்தது.அந்த அரசு, போராட்ட மரணங்கள் தொடா்பாக ஷேக் ஹசீனா மீதும் மற்றவா்கள் மீதும் சுமாா் 200 வழக்குகளைப் பதிவு செய்தது. இந்த நிலையில், அவருக்கு எதிராக தற்போது கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சா்வதேச அளவில் இந்தியாவின் வளா்ச்சி சிறப்பு: உலக வங்கி

உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் வளா்ச்சி விகிதம் சிறப்பாக உள்ளது என்று உலக வங்கி தலைவா் அஜய் பங்கா தெரிவித்தாா். இந்தியாவின் உள்நாட்டுச் சந்தையால் இது சாத்தியமாகியுள்ளது என்பதை அவா் சுட்டிக்காட்டினாா்... மேலும் பார்க்க

இலங்கையில் காட்டு யானைகள் மீது மோதி தடம்புரண்ட ரயில்

இலங்கையில் காட்டு யானைகள் மீது மோதிய எரிபொருள் ரயில் தடம்புரண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பில் உள்ள கொலன்னாவ பெட்ரோலிய சேமிப்பு முனையத்தில் இருந்து கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்புக்கு... மேலும் பார்க்க

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷியா செல்கிறார் பிரதமர்!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 22, 23 ஆகிய தேதிகளில் ரஷிய பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ரஷிய அதிபர் விளாடிமீர் புதினின்... மேலும் பார்க்க

கடந்த 75 ஆண்டுகளில் இருவரும் நிறையவற்றை இழந்துள்ளோம்: இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்

இந்தியாவும் பாகிஸ்தானும் வருங்காலங்களில் ஒன்றாக பணியாற்ற விரும்புவதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய வெளியுறவுத் துறை அ... மேலும் பார்க்க

ஹமாஸ் தலைவர் யாஹா சின்வாரின் கடைசி நிமிடங்கள்.. வெளியான விடியோ

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவா் யாஹா சின்வாரின் கடைசி நிமிட விடியோவை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி இஸ்ரேலில் நடைபெற்ற கொடூர தாக்குதல்களின் பி... மேலும் பார்க்க