செய்திகள் :

அசாம்: அரசு மகளிர் காப்பகத்தில் ஹோலி கொண்டாடிய ஆளுநர்!

post image

வடகிழக்கு மாநிலமான அசாமின் ஆளுநர் அம்மாநில அரசின் மகளிர் காப்பகத்தில் வசிப்பவர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

குவாஹட்டி மாவட்டத்தின் ஜலுக்பாரி பகுதியிலுள்ள அரசு மகளிர் காப்பகத்தில் வசிப்பவர்களுடன் அம்மாநில ஆளுநர் லக்‌ஷ்மன் பிரசாத் ஆச்சாரியா, இன்று (மார்ச் 14) ஹோலி பண்டிகையை கொண்டாடியுள்ளார்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், அங்கு வசிக்கும் பெண்களிடையே மகிழ்ச்சியைப் பரப்பவும், சொந்தம் என்ற உணர்வை ஊக்குவிக்கவும் ஆளுநர் அவர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: கன்னட நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு தள்ளுபடி

இதனைத் தொடர்ந்து, ஆளுநர் லக்‌ஷ்மன் பிரசாத் அந்த காப்பகத்தில் வசிக்கும் பெண்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் பரிசுக்களையும் வழங்கினார்.

மேலும், அங்கு வசிக்கும் பெண்கள் வாழ்க்கையின் நேர்மறையான விஷயங்களில் கவனம் செலுத்துமாறும், ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டு நம்பிக்கையுடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, நீர் செடிகளிலிருந்து பல்வேறு பொருள்களை தயாரிப்பதில் அவர்களின் திறமைகளையும் படைப்பாற்றலையும் குறிப்பிட்டு அவர் பாராட்டினார்.

ரூ.10 கோடியில் தமிழ்நாடு முந்திரி வாரியம்

பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பனை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கவும் “பனை மேம்பாட்டு இயக்கம்” உருவாக்கப்படும். புதிய பலா இரகங்களை பரவலாக்கவும், பலாவின் ஊடுபயிர் சாகுபடியை மேற்கொள்ளவும், பலா ம... மேலும் பார்க்க

வேளாண் பட்ஜெட்: கரும்பு விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகள்!

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 297 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலையை வேளாண் த... மேலும் பார்க்க

வேளாண் நிதிநிலை அறிக்கை - 2025 - 2026: முக்கிய சிறப்பு அறிவிப்புகள்!

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் வேளாண்மை உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சனிக்கிழமை(மார்ச்.15) தாக்கல் செய்து வருகிறார்.தமிழக அரச... மேலும் பார்க்க

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தாக்கல்!

தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்தார். தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நித... மேலும் பார்க்க

சுனிதா வில்லியம்ஸை அழைத்துவர புறப்பட்டது ராக்கெட்!

கடந்த 9 மாதங்களுக்கு மேலாக சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு நாசா விண்வெளி வீரா் பட்ச் வில்மோரையும் பூமிக்கு அழைத்து வர... மேலும் பார்க்க

வேளாண் பட்ஜெட்: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் மரியாதை!

வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதையடுத்து, சென்னை மெரீனாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார்.தமிழக அரசின் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான... மேலும் பார்க்க