செய்திகள் :

முதல்முறையாக இந்திய சினிமாவில் அறிமுகமான டேவிட் வார்னர்..!

post image

ஆஸி. முன்னாள் கிரிக்கெட்டர் டேவிட் வார்னர் இந்திய சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

37 வயதான வாா்னா் டி20 உலகக் கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தாா். கடந்த 2009-இல் அறிமுகமான வாா்னா், டி20யில் 110 ஆட்டங்களில் 3,277 ரன்களும், 112 டெஸ்ட் ஆட்டங்களில் 8,786 ரன்களும் 161 ஒருநாள் ஆட்டங்களில் 6,932 ரன்களும் எடுத்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா பட ஸ்டைலில் இவர் செய்யும் ரீல்ஸ்கள் மிகவும் புகழ் பெற்றவை. 

தீபாவளி, விநாயகர் சதுர்த்தி என இந்திய விழாக்களுக்கு தவறாமல் வாழ்த்துகளைத் தெரிவிப்பார்.

"டேவிட் வார்னர் ஆஸ்திரேலியரை போல் அல்லாமல் இந்தியராகவே அதிகம் இருக்கிறார். நான் அதைத்தான் அவரிடம் சொல்லுவேன். 70 சதவிகிதம் இந்தியர்; மீதி 30 சதவிகிதம் ஆஸ்திரேலியர்” என வார்னர் குறித்து அவரது சக தோழர் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

புஷ்பா 2 படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால், படத்தில் அந்தமாதிரி எதுவும் வரவில்லை.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் டேவிட் வார்னர் நடிப்பது உறுதியாகியுள்ளது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ராபின்ஹூட் என்ற திரைப்படத்தில் டேவிட் வார்னர் நடிக்கிறார்.

இந்தப் படம் மார்ச்.28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. நடிகர் நிதின், நடிகை ஸ்ரீ லீலா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தை வெங்கி குடுமுலா இயக்கியுள்ளார். நடிகரும் இசையமைப்பாளருமான ஜீ.வி.பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

லோன் வாங்குவதுதான் மிக மோசமான கெட்ட பழக்கம்: ஹாரிஸ் ஜெயராஜ்

லோன் வாங்குவது மிக மோசமான பழக்கம் என இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.தமிழின் முன்னணி இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் திரைப்படங்களுக்கு இசையமைப்பதுடன் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.... மேலும் பார்க்க

வீர தீர சூரன் - கல்ட் கமர்ஷியல்: தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!

வீர தீர சூரன் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, நடிகை துஷாரா விஜய... மேலும் பார்க்க

ஹிந்தி- தமிழர்கள் பிரச்னை: பவன் கல்யாணுக்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலளித்து பேசியுள்ளார்.ஹிந்தி திணிப்பை எதிர்க்கும் தமிழர்களை சீண்டும் விதமாக ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் பேசியுள்ளது சர்ச்சையைக் கிள... மேலும் பார்க்க

ஹிந்தியை எதிர்க்கும் தமிழர்கள் ஏன் தமிழ்ப்படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்கிறீர்கள்: பவன் கல்யாண்

நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் தமிழ்ப் படங்களை ஹிந்தியின் ஏன் டப்பிங் செய்கிறீர்கள் என ஆவேசமாகப் பேசியுள்ளார். ஹிந்தி திணிப்பை எதிர்க்கும் தமிழர்களை சீண்டும் விதமாக ஆந்திர துணை முதல்வரு... மேலும் பார்க்க

ராட்சசன் கூட்டணியில் அடுத்த படம்: முதல் பார்வை போஸ்டர் அப்டேட்!

முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் ராம்குமார். நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற முண்டாசுப்பட்டியைத் தொடர்ந்து சிறிது ஆண்டுகள் படம் எத... மேலும் பார்க்க

அம்பானி வீட்டுத் திருமணத்தில் பல லட்சம் மதிப்புள்ள வைரத்தைத் தொலைத்த நடிகை!

நாட்டின் மிகப் பணக்கார தொழிலதிபர்களில் முன்னணியில் இருக்கும் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி திருமணத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்து விட மாட்டார்கள்.அவ்வளவு ஆடம்பரமாக பல நாள்கள், உலக நாடுகளிலிருந... மேலும் பார்க்க