லோன் வாங்குவதுதான் மிக மோசமான கெட்ட பழக்கம்: ஹாரிஸ் ஜெயராஜ்
லோன் வாங்குவது மிக மோசமான பழக்கம் என இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழின் முன்னணி இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் திரைப்படங்களுக்கு இசையமைப்பதுடன் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
இறுதியாக, இவர் இசையமைத்த பிரதர் திரைப்படம் சரியான கவனத்தைப் பெறவில்லை. அப்படத்தில் இடம்பெற்ற மக்காமிஷி பாடல் மட்டும் வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து, ரவி மோகனின் கராத்தே பாபு படத்தில் இசையமைக்க ஒப்பந்தமானார். ஆனால், சில காரணங்களால் அப்படத்திலிருந்து வெளியேறினார்.
இதையும் படிக்க: வீர தீர சூரன் - கல்ட் கமர்ஷியல்: தயாரிப்பாளர் நெகிழ்ச்சி!
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய ஹாரிஸ் ஜெயராஜ், “உலகில் மிக மோசமான கெட்ட பழக்கம் என்றால் அது லோன் வாங்குவதுதான். குடிப்பழக்கம் இருந்தால் தனிப்பட்ட நபருக்குதான் பாதிப்பு. ஆனால், கடன் உங்களையும் சுற்றியுள்ள உறவுகளையும் கடுமையாக பாதிக்கும். கார், பங்களாவைவிட அலாரம் வைக்காமல் நிம்மதியாகத் தூங்கி எழும் வாழ்க்கையே ஆடம்பரமானது” எனத் தெரிவித்துள்ளார்.