ஹாக்கி இந்தியா விருதுகள்: சிறந்த ஹாக்கி குழு விருதைப் பெற்ற தமிழ்நாடு!
“பதற்றமாக இருந்தேன்...” ஐபிஎல் மெகா ஏலம் குறித்து மனம் திறந்த கே.எல்.ராகுல்!
ஐபிஎல் மெகா ஏலத்தின்போது பதற்றமாக இருந்ததாக இந்திய அணியின் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடுகிறது.
இதையும் படிக்க: நியூசி.க்கு எதிரான தொடரில் சிறந்த முடிவுகளை பெறுவோம்: பாக். கேப்டன்
ஐபிஎல் தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்ஷர் படேல் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
பதற்றமான அனுபவம்
விரைவில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஐபிஎல் மெகா ஏலத்தின்போது பதற்றமாக இருந்ததாக இந்திய அணியின் கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் மெகா ஏலம் பதற்றம் கலந்த அனுபவமாக இருந்தது. ஒரு வீரராக ஏலத்தில் எந்த அணியால் வாங்கப்படுவோம் எனக் கூறுவது மிகவும் கடினம். பல ஆண்டுகளாக ஐபிஎல் ஏலம் கணிக்க முடியாததாக இருந்ததைப் பார்த்திருக்கிறேன். ஐபிஎல் ஏலத்தில் வீரர்கள் எதன் அடிப்படையில் ஏலம் போகிறார்கள் என்பதை மிகவும் உறுதியாக கூற முடியாது.
இதையும் படிக்க: காயம் குணமாகியது: சன்ரைசர்ஸ் அணியில் இணையும் நிதீஷ் ரெட்டி!
ஐபிஎல் தொடரில் அணியின் கேப்டனாக மூன்று ஆண்டுகளாக செயல்பட்டுள்ளதன் மூலம், ஒரு அணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டுள்ளேன். அணியை கட்டமைக்கும்போது, அந்த அணி நிர்வாகத்துக்கு உள்ள அழுத்தத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஒரு வீரராக பார்க்கும்போது, இது மேலும் கடினம். ஏனெனில், சம்பந்தப்பட்ட வீரரின் கிரிக்கெட் பயணம் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது.
ஐபிஎல் ஏலம் வீரர்களின் எதிர்கால பயணத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதேபோல, நிகழ்காலத்தில் வீரர்களுக்கு எதிர்பாராத சவால்களை அளிக்கக் கூடியதாகவும் அமையலாம். ஐபிஎல் மெகா ஏலத்தின்போது, நான் மிகவும் பதற்றமாக இருந்தேன். எதிர்காலம் குறித்த கவலையும் இருந்தது. அதேபோல, உற்சாகமும் இருந்தது. தில்லி கேபிடல்ஸ் அணியில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
இதையும் படிக்க: முதல்முறையாக இந்திய சினிமாவில் அறிமுகமான டேவிட் வார்னர்..!
தில்லி அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டால் எனது நெருங்கிய நண்பர். கிரிக்கெட்டை தவிர்த்து நாங்கள் பல விஷயங்கள் குறித்து ஆலோசித்துள்ளோம். அவர் விளையாட்டில் எந்த அளவுக்கு ஈடுபாடு கொண்டவர் என்பது எனக்குத் தெரியும். தில்லி கேபிடல்ஸ் அணி வலுவாக உள்ளது. தில்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளதை ஆவலாக எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றார்.