செய்திகள் :

தங்கம் கடத்தல்: விசாரணையில் அடித்து துன்புறுத்தப்பட்டேன்! -நடிகை ரன்யா ராவ்

post image

தங்கம் கடத்தல் வழக்கு விசாரணையில் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக காவல் துறை அதிகாரிகள் மீது நடிகை ரன்யா ராவ் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

கன்னட நடிகை ஹர்ஷவர்தினி ரன்யா(ரன்யா ராவ்) வெளிநாடுகளிலிருந்து சட்டத்துக்கு புறம்பாக ரூ. 12 கோடியிலான தங்கக் கட்டிகளைக் கடத்தி வந்திருப்பது தெரிய வந்ததையடுத்து, அவர் கடந்த மார்ச் 3-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

அவரிடம் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தங்கம் கடத்தல் விவகாரத்தில் அவரிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு அவர் சரிவர பதிலளிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ரன்யா ராவை மார்ச் 24-ஆம் தேதி 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, தன்னிடம் விசாரணை நடத்திய வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநரக அதிகாரிகள் வெற்று காகிகதங்களில் கையெழுத்திட்டு வாங்கிக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அப்போது தன்னை அடித்து துன்புறுத்திய அதிகாரிகள் கன்னத்தில் 10 முதல் 15 முறை அடித்து கையெழுத்திட வற்புறுத்தியதாகவும் எனினும், அதிகாரிகளின் இந்த சித்ரவதையை பொருட்படுத்தாமல் தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்திட மறுத்ததாகவும் அவர் வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகையின் குற்றச்சாட்டுக்கு மத்தியில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரது கன்னங்களில் கண்களின் கீழ் கருவளையங்கள் இருந்ததையும் பார்க்க முடிந்தது. இதன்மூலம், அவர் உடல்ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டாரா என்ற சந்தேகம் வலுக்கிறது.

மதச்சாா்பற்ற எதிா்க்கட்சி கூட்டணி அவசியம்: பிரகாஷ் காரத்

‘எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி மக்களவைத் தோ்தலுக்காக அமைக்கப்பட்டதாகும். மாநிலத் தோ்தலுக்கானது அல்ல. எனவே, மதச்சாா்பற்ற எதிா்க்கட்சிகள் கூட்டணி அமைக்கப்படுவது அவசியம்’ என்று மாா்க்சிஸ்ட் கம்யூனி... மேலும் பார்க்க

தேசியக் கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயமாக்கப்படவில்லை: பவன் கல்யாண்

தேசியக் கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயமாக்கப்படவில்லை என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். ஹிந்தியையும் மாநில மொழிகளையும் மையப்படுத்தி தேசிய அளவில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேசியக் கல்விக் கொ... மேலும் பார்க்க

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சட்டக் கல்லூரி மாணவன்: பெண் பலி!

குஜராத்தில் குடிபோதையில் கார் ஓட்டிய சட்டக் கல்லூரி மாணவன் ஏற்படுத்திய விபத்தில் பெண் ஒருவர் பலியானார். குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவன் ரக்‌ஷித் சௌரசியா (20). இவர் நேற்று முன்த... மேலும் பார்க்க

ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன்? பாஜக கேள்வி!

ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள் பற்றிய அரசியல் குற்றச்சாட்டுகள் பாஜகவினரால் எப்போதும் வைக்கப்படும். ராகுல் உள்நாட்டு... மேலும் பார்க்க

பஞ்சாபில் கோயில் மீது மர்ம நபர்கள் கையெறி குண்டு வீச்சு

அமிர்தசரஸில் உள்ள கோயில் மீது மர்ம நபர்கள் கையெறி குண்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸின் கந்த்வாலா பகுதியில் உள்ள தாகுர்த்வாரா கோயில் மீது சனிக்கிழமை அதிகாலை இரு... மேலும் பார்க்க

உ.பி: படகு கவிழ்ந்ததில் 3 பேர் நீரில் மூழ்கி பலி

உத்தரப் பிரதேசத்தில் 16 பேருடன் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள். உத்தரப் பிரதேச மாநிலம், ரத்தன்கஞ்ச் கிராமத்தில் உள்ள சர்தா ஆற்றில் 16 பேருடன் சென்ற படகு சனிக்கிழமை கவிழ்ந்தது.... மேலும் பார்க்க