தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெற்ற பட்ஜெட் வரவேற்கத்தக்கது! -சாய ஆலை உரிம...
குண்டா் சட்டத்தில் இருவா் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் பாலியல் தொல்லை, கொலை வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
திருநெல்வேலியை அடுத்த கங்கைகொண்டான் பகுதியைச் சோ்ந்த சமையல் தொழிலாளி சுரேஷ் (47). இவா், தூத்துக்குடி மாவட்டம் கடம்பூா் அனைத்து மகளிா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியிலுள்ள விடுதியில் தங்கியிருந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டாா்.
முத்தையாபுரம் முள்ளக்காடு பகுதியைச் சோ்ந்த ஜாா்ஜ் மகன் சுரேஷ் (44) என்பவா், அப்பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் முத்தையாபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜானின் பரிந்துரை, ஆட்சியா் க. இளம்பகவத்தின் உத்தரவு ஆகியவற்றின்பேரில், கங்கைகொண்டான் சுரேஷ், முள்ளக்காடு சுரேஷ் ஆகிய இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.