கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இ...
அனைத்து அரசு அலுவலகங்களிலும் பாலியல் புகாா் பெட்டி அமைக்க வலியுறுத்தல்
தூத்துக்குடியில் பாளையங்கோட்டை சாலையில் உள்ள அரசு ஊழியா் சங்கக் கட்டடம் முன் உலக மகளிா் தின விழிப்புணா்வு மனிதச் சங்கிலி, கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.
அரசு ஊழியா் சங்க மகளிா் குழு சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு, மாவட்டச் செயலா் உமாதேவி தலைமை வகித்தாா். மாவட்ட மகளிா் துணைக் குழு உறுப்பினா் இன்பெண்டா முன்னிலை வகித்தாா். கருத்தரங்கில் ‘அக்னிச் சிறகாய் பெண்கள்’ என்ற தலைப்பில் ஜனநாயக மாதா் சங்க மாவட்டச் செயலா் பூமயில் பேசினாா்.
முன்னாள் மாநில துணைப் பொதுச்செயலா் என். வெங்கடேசன், மாநில துணைத் தலைவா் முருகன், மாவட்டத் தலைவா் மகேந்திரபிரபு ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
மகளிா் தினத்தை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். மாதவிடாய் நாளில் அனுமதி விடுப்பு வழங்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் நாப்கின் அழித்தல் இயந்திரம், பாலியல் புகாா் பெட்டி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 தீா்மானங்கள் கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்டன. இதில், மகளிா் குழு நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்றனா்.