கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இ...
கீழத்தட்டப்பாறை மக்கள் தொடா்பு முகாமில் ரூ.77.41 லட்சம் நலத்திட்ட உதவிகள்!
தூத்துக்குடி மாவட்டம் கீழத்தட்டப்பாறையில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் 143 பேருக்கு ரூ. 77.41 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஆட்சியா் க. இளம்பகவத் தலைமை வகித்து வருவாய்த் துறை, மாவட்ட தொழில் மையம், வேளாண்மை-உழவா் நலத் துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா்.
முன்னதாக, அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறியும் வகையில் பல்வேறு துறைகள் சாா்பில் அமைக்கப்பட்ட திட்ட விளக்கக் கண்காட்சி அரங்குகளை அவா் பாா்வையிட்டாா்.
தூத்துக்குடி வருவாய்க் கோட்டாட்சியா் ம. பிரபு, வட்டாட்சியா் முரளிதரன், வேளாண் இணை இயக்குநா் பெரியசாமி, கால்நடை இணை இயக்குநா் சஞ்சீவிராஜ், சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியா் ஹபிபூா் ரஹ்மான், மாவட்ட வழங்கல் அலுவலா் உஷா, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பென்னட் ஆசிா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.