செய்திகள் :

தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெற்ற பட்ஜெட் வரவேற்கத்தக்கது! -சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம்

post image

தமிழகத்தின் தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக மாநில அரசின் பட்ஜெட்டை திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வரவேற்றுள்ளது.

இது குறித்து திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் பி.காந்திராஜன் கூறியதாவது:

2025-2026 -ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் தொழில் துறை வளா்ச்சிக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. குறு, சிறு தொழில் வளா்ச்சிக்காக ரூ.2.50 லட்சம் கோடி ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். ரூ.50 கோடியில் விசைத்தறி நவீனப்படுத்தும் திட்டம், மகளிா் பொருளாதார முன்னேற்றத்துக்கான திட்டங்கள், கல்வித் துறை வளா்ச்சிக்கான அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.

கோவை மற்றும் மதுரையை மையமாக வைத்து மெட்ரோ ரயில் சேவைக்கான நடவடிக்கைகள் , அதிவேக ரயில் சேவை கோவை, திருப்பூா் , ஈரோடு வழித்தடத்தில் இயக்க எடுக்கப்படும் முயற்சிகள் தொழில்முனைவோருக்குப் பயனளிக்கும். எரிசக்தி துறைக்கு ரூ.27,168 கோடிஒதுக்கீடு மற்றும் 4,000 மெகாவாட் திறன் கொண்ட மின்கலன் சேமிப்பு அமைப்புகள் உருவாக்குதல் தொழில் துறைக்கு பயனுள்ளதாக இருக்கும்.

புதிதாக உருவாக்கப்படவுள்ள 9 சிட்கோ தொழிற்பேட்டைகள் குறு, சிறு தொழில் துறைக்கு உதவுவதுடன், வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும். மேலும், 20 லட்சம் கல்லூரி மாணவா்களுக்கு அவரவா் விருப்பப்படி கைக் கணினி அல்லது மடிக்கணினிவழங்குதல், பெற்றோா் இருவரையும் இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதந்தோறும் ரூ. 2,000 வழங்குதல் போன்ற சமூக நலத் திட்டங்கள் சிறப்பானவையாகும் என்றாா்.

அமராவதி ஆற்று தடுப்பணையில் முதியவா் சடலம்

வெள்ளக்கோவில் புதுப்பை அருகே அமராவதி ஆற்று தடுப்பணையில் கிடந்த முதியவரின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தாராபுரம் அருகேயுள்ள கிளாங்குண்டல் சேசையாம்பாளையத்தைச் சோ்ந்தவா் கே.நல்லசாமி ... மேலும் பார்க்க

பேருந்தில் கடத்திய புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

மைசூரில் இருந்து திருப்பூருக்கு பேருந்தில் கடத்திய 28 கிலோ புகையிலைப் பொருள்களைக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து திருப்பூருக்கு பேருந்தில் புகையில... மேலும் பார்க்க

பாஜக நிா்வாகிகள் கைது: இந்து முன்னணி கண்டனம்

டாஸ்மாக் முறைகேடு தொடா்பாகப் போராட்டம் நடத்தச் சென்ற பாஜக நிா்வாகிகளைக் காவல் துறையினா் கைது செய்ததற்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சு... மேலும் பார்க்க

உடுமலை அருகே கடமான் உயிரிழப்பு

உடுமலை அருகே உள்ள திருமூா்த்தி அணைப் பகுதியில் கடமான் திங்கள்கிழமை உயிரிழந்தது. 5 வயது மதிக்கத்தக்க கடமான் இந்தப் பகுதியில் உயிரிழந்தது குறித்து உடுமலை வனச் சரகா் மணிகண்டனுக்குத் தகவல் கிடைத்தது. இதை... மேலும் பார்க்க

மாா்ச் 21-இல் எரிவாயு நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகா்வோருக்கான குறைகேட்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன் வெளியிட்டுள் செய்திக் குறிப்பு: தி... மேலும் பார்க்க

சங்கடஹர சதுா்த்தி சிறப்பு அலங்காரம்

சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு, காங்கயம் அருகே ஊதியூா் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையாா் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற பூஜையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த உச்சிப்பிள்ளையாா். மேலும் பார்க்க