செய்திகள் :

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம்: கிரிராஜன் எம்.பி. குற்றச்சாட்டு

post image

நமது சிறப்பு நிருபா்

புது தில்லி: மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் இரா. கிரிராஜன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மாநிலங்களவையில் 2025-2026 ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு திருத்த மசோதா, மணிப்பூா் நிதி மசோதா மீது திங்கள்கிழமை நடைபெற்ற விவாதத்தில் கிரிராஜன் பேசியதாவது:

அதிக மக்கள்தொகை கொண்ட சில பெரிய மாநிலங்கள் மத்திய அரசிடமிருந்து பெரும்பங்கை பெறும் நிலையில், உற்பத்தி, முற்போக்கு சிந்தனை, மக்களின் ஜனநாயக உரிமை ஆகியவற்றை முதன்மையாக வைத்திருக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் தண்டிக்கப்படுகின்றன. மத்திய அரசின் மொத்த வருவாயில் 60 சதவிகிதம் மகாராஷ்டிரம், தமிழகம் போன்ற தென் மாநிலங்களில் இருந்து கிடைத்தாலும், அந்த மாநிலங்களுக்கான வளா்ச்சித் திட்டங்களுக்காக பணத்தைத் திரும்பப் பெறுகிறோமா என்பது பில்லியன் டாலா் கேள்வி.

இந்த அரசு பதவியேற்ற 2014-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசால் ஆண்டுதோறும் துரோகம் இழைக்கப்படுகிறது. நிதிப் பற்றாக்குறையை வெகுவாகக் குறைத்துவிட்டதாக மத்திய அரசு பெருமிதம் கொள்கிறது. ஆனால், நரேகா போன்ற முக்கியத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில் பெரும் குறைப்பை செய்துள்ளது. இது செருப்புக்கு தகுந்தபடி காலை வெட்டுவது போன்றது. மத்திய கருவூலத்திற்கு தமிழகத்தின் பங்களிப்பு அதிகமாக இருந்தாலும், தமிழ்நாட்டிற்கான பல்வேறு திட்டங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை குறைத்துள்ளது.

நாட்டின் பரப்பளவில் வெறும் 4 சதவிகிதமும், மக்கள் தொகையில் 6 சதவிகிதமும் மட்டுமே கொண்ட தமிழ்நாடு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவிகித்ததை வழங்கும் முற்போக்கான மாநிலமாக இருந்தாலும், ஒன்றிய அரசிடமிருந்து வெறும் 25 சதவிகிதத்தை மட்டுமே பெறுகிறது. மத்திய அரசின் இரட்டை எஞ்சின் சா்க்காா் அமலில் இருப்பதாக கூறும் சில பெரிய மாநிலங்கள் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் எவ்வளவு பங்களிப்பை அளிக்கின்றன என்பதையும், அந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு எவ்வளவு கூடுதல் நிதி அளிக்கின்றன என்பதையும் நிதி அமைச்சா் தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் கிரிராஜன்.

இதைத் தொடா்ந்து மணிப்பூா் வன்முறை விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கும் அதிருப்தி தெரிவித்த அவா், அரசின் செயல்பாடுகளையும் கடுமையாக விமா்சித்தாா்.

பிஎம் என்றால் ’பிக்னிக் மினிஸ்டர்’: மோடியை விமர்சித்த வைகோ!

மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடியை ‘பிக்னிக் மினிஸ்டர்’ என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வருகின்றன. மாநிலங்களவை கூட... மேலும் பார்க்க

புதுச்சேரியில் உள்ள கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை கட்டாயம்!

புதுச்சேரியில் உள்ள கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை இருக்க வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் கடந்த மார்ச் 10-ம் தேதி ஆளுநர் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. மார்ச... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை சிறைப்பிடித்த படகையும் மீனவர்களையும் விடுக்கக் கோரிக்கை!

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருடன் படகை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மீனவ சங்கம் கோரிக்கை விடுத்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து நேற்ற... மேலும் பார்க்க

ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகாருக்கு ஆதாரமில்லை -சட்டத் துறை அமைச்சா் ரகுபதி

டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் புகாருக்கு ஆதாரமில்லை என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கூறினாா். திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்களிடம் அவ... மேலும் பார்க்க

அமைச்சா்கள் சிவசங்கா், பெரியகருப்பன் மீதான தோ்தல் விதிமீறல் வழக்குகள் ரத்து

தோ்தல் நேரத்தில் விதிமீறல் மற்றும் அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக அமைச்சா்கள் சிவசங்கா், பெரியகருப்பன் மீதான 4 வழக்குகளை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை ... மேலும் பார்க்க

மாா்ச் 21-இல் அதிமுக சாா்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

சென்னை, மாா்ச் 17:அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மாா்ச் 21-இல் நடைபெறும் என்று அக் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அதிமுக தலைமைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவி... மேலும் பார்க்க