Sunita Williams: 17 மணி நேர பயணம்; பெருங்கடலில் தரையிறக்கம்; நிலவரம் என்ன?
இலங்கை கடற்படை சிறைப்பிடித்த படகையும் மீனவர்களையும் விடுக்கக் கோரிக்கை!
இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேருடன் படகை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க மீனவ சங்கம் கோரிக்கை விடுத்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 403 விசைப்படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது கென்னடி என்பவரது படகை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர்.
படகில் இருந்த மீனவர்கள் சங்கர், அர்ச்சுணன், முருகேசன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து காங்கேசம் துறை கடற்டை துறைமுகற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கச்சத்தீவு திருவிழா முன்னிட்டு ஐந்து நாட்களுக்கு பின் மீன்பிடிக்க சென்ற நிலையில், ஒரு விசைப்படகு மற்றும் மினவர்களை சிறைப்பிடித்த சம்பவம் மீனவர்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து மீனவ சங்கத்தலைவர் சகாயம் கூறுகையில்:
ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யபடுவது, பல லட்சம் அபராதம் விதிப்பது மற்றும் கைது செய்யப்பட்ட படகுகள் மற்றும் மீனவர்களை விடுவிக்க கோரி மீனவ சங்கத்தினர் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து மனு அளித்தோம்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த நிலையில் மீண்டும் 3 மீனவர்களுடன் ஒரு விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றுள்ளனர்.
இதற்கு கண்டனம் தெரிவிப்பதுடன் படகுடன் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிக்க | தங்கம் விலை ரூ.66,000! புதிய உச்சம்!