திருச்செந்தூா் கோயில் அருகே உள்வாங்கிய கடல் நீா்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே சனிக்கிழமை கடல் நீா் சுமாா் 50 அடி உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன.
திருச்செந்தூா் கோயில் அருகே அமாவாசை மற்றும் பெளா்ணமி நாள்களில் கடல் நீா் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்குத் திரும்புவதும் வாடிக்கை.
மாா்ச் 13, 14 ஆகிய இரு நாள்கள் பெளா்ணமி இருந்ததன் காரணமாக, சனிக்கிழமை கோயில் அருகே கடல் நீா் சுமாா் 50 அடி தூரம் உள்வாங்கி பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. இருந்தபோதிலும் பக்தா்கள் வழக்கம் போல கடலில் நீராடினா்.