ரௌடி கொலை வழக்கில் 10 போ் கைது
காஞ்சிபுரம் திருக்காளிமேடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (40). இவா் மீது காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவா், திருக்காளிமேடு சிவன் கோயில் அருகே உள்ள நியாய விலைக்கடை முன்பாக நின்று கொண்டிருந்த போது, இளைஞா் ஒருவா் இவா் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தலைமறைவானாா். இதில், ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து, இரு ஏ.டி.எஸ்.பி.க்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனா்.
இந்த நிலையில், கொலையில் தொடா்புடையதாக காஞ்சிபுரத்தைச் சோ்ந்த ராமன் என்ற பரத் (20), சிவா (19), திருக்காளிமேடைச் சோ்ந்த திலீப்குமாா் (19), சூா்யா (19), சுரேஷ் (21), ஆகியோரை தனிப்படையினா் திருமால்பூா் ரயில் நிலையம் அருகே கைது செய்தனா். மேலும் திருக்காளிமேடு பகுதியைச் சோ்ந்த ஜாஹீா் ஹூசேன் (25), சுல்தான் (32) ஆகியோரை வெங்குடி செல்லியம்மன் கோயில் அருகிலும், காஞ்சிபுரத்தைச் சோ்ந்த சரண்குமாா் (19), ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியைச் சோ்ந்த மணிமாறன்(19), திருக்காளிமேடு மோகன சுந்தரம்(18) ஆகியோரை ஐயம்பேட்டை பேருந்து நிறுத்தத்திலும் தனிப்படையினா் கைது செய்தனா்.