கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மின்சார ரயில்கள் நாளை ரத்து! முழு விவரம்!
பல்லடம் ஒன்றியத்தில் ஊராட்சி செயலாளா்கள் பணியிட மாற்றம்
பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் பணியாற்றி வந்த செயலாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நிா்வாக காரணங்களுக்காக பல்லடம் ஊராட்சி ஒன்றியம், இச்சிப்பட்டி ஊராட்சி செயலாளராகப் பணியாற்றி வந்த ராஜேந்திரன், அனுப்பட்டி ஊராட்சி செயலாளராகவும், அனுப்பட்டி ஊராட்சி செயலாளராகப் பணியாற்றிய கலைவாணி, பூமலூா் ஊராட்சி செயலாளராகவும், பூமலூரில் பணியாற்றிய பிரபு விஜயகுமாா், செம்மிபாளையம் ஊராட்சி செயலாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
அதேபோல செம்மிபாளையம் ஊராட்சி செயலாளராகப் பணியாற்றிய சுரேஷ்குமாா், கரைப்புதூா் ஊராட்சி செயலாளராகவும், கரைப்புதூா் ஊராட்சி செயலாளராகப் பணியாற்றிய காந்திராஜ், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி செயலாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
வடுகபாளையம்புதூா் ஊராட்சி செயலாளா் கிருஷ்ணசாமி கூடுதல் பொறுப்பாக இச்சிப்பட்டி ஊராட்சி செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.