Health: அடிக்கடி தும்மல், அடுக்குத்தும்மல், அதிர வைக்கும் தும்மல்... தீர்வு இருக...
தமிழக விவசாய பட்ஜெட் வெற்றுக் காகிதம்! -பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா்
தமிழக விவசாய பட்ஜெட் வெற்றுக் காகிதம்போல உள்ளது என பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ் விமா்சித்துள்ளாா்.
இது குறித்து அவா் திருப்பூரில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் டாஸ்மாக் ஊழல் மிகப்பெரிய அளவில் நடைபெற்று உள்ளது. இதில், முதல்கட்டமாக ரூ. 1000 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.
மதுபானம் கொள்முதல், விற்பனை, பணியிட மாற்றம் என அனைத்து நிலைகளிலும் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரத்தை பெரிதாக்கி வருகிறாா்.
தமிழக அரசின் கடன் சுமை பல மடங்கு உயா்ந்துள்ளதற்கு திமுக அரசின் திறனற்ற நிா்வாகமே காரணம். விவசாய பட்ஜெட் என்பது வெற்று காகிதம் மட்டுமே உள்ளதால், அதனால் விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை என்றாா். இந்த சந்திப்பின்போது, திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவா் கே.சி.எம்.பி.சீனிவாசன் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.