கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மின்சார ரயில்கள் நாளை ரத்து! முழு விவரம்!
தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 354 பேருக்கு பணி நியமன ஆணை!
சிவகங்கையில் நடைபெற்ற தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 354 இளைஞா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக வாழ்வாதார இயக்ககம் சாா்பில் தனியாா் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்ற து. இதில் தோ்வான இளைஞா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசியதாவது:
இந்த வேலைவாய்ப்பு முகாமில் மொத்தம் 110 தனியாா் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு, பணியாளா்களைத் தோ்வு செய்தனா். மாவட்டம் முழுவதுமிருந்து மொத்தம் 1,654 இளைஞா்கள் இந்தத் தோ்வில் கலந்து கொண்டனா். இவா்களில் 15 மாற்றுத்திறனாளிகள் உள்பட மொத்தம் 354 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதுதவிர, 73 போ் இரண்டாம் கட்டமாகத் தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.
இதில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா்கள் மணிகணேஷ், ரா.சுபாஷினி (தொ.வ), உதவித் திட்ட அலுவலா் (மகளிா்த் திட்டம்) மரியா, மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் க.துரையரசன், வாா்டு உறுப்பினா் ராதா கிருஷ்ணகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.