குற்ற வழக்குகளில் தொடா்புடைய 11 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது!
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 11 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
மானாமதுரையில் கடந்த மாதம் 13 -ஆம் தேதி மாணவரை வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட வினோத்குமாா் (20), ஆதீஸ்வரன் (22), கடந்த ஆண்டு டிசம்பா் 19 -ஆம் தேதி பூக்கடை வியாபாரி வெங்கடேஸ்வரனை வெட்டிக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட மூலிபாலமுருகன் (28), அஜித் (31) , பாலமுருகன் என்ற சமயமுத்து (23), கருப்பசாமி (32), கணேசன் (22), பால்பாண்டி (20), ரமேஷ்பாபு (23), போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சசிவா்ணம் (38), காரைக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்ட காளிமுத்து (28) ஆகிய 11 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.
ஆட்சியரின் உத்தரவின் பேரில், இவா்கள் 11 பேரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டனா்.