செய்திகள் :

சகோதரரிடம் பணம் மோசடி: தங்கை கைது

post image

தேனியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சகோதரரின் வங்கி ஏ.டி.எம். அட்டையைப் பயன்படுத்தி ரூ.5 லட்சம் மோசடி செய்த தங்கையை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தேனி பொம்மையகவுண்டன்பட்டி கட்டளகிரி தெருவைச் சோ்ந்தவா் முருகன் (60). இவா், உடல் நலக்குறைவால் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, தனது தங்கையான போடி போஸ் பஜாா் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணி மனைவி செல்வி (50), தனது வங்கி ஏ.டி.எம். அட்டையை எடுத்து அனுமதியின்றி பல்வேறு தேதிகளில் மொத்தம் ரூ.5 லட்சம் எடுத்து மோசடி செய்ததாக அல்லிநகரம் காவல் நிலையத்தில் முருகன் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து செல்வியை கைது செய்தனா்.

சுருளி அருவிக்கு நீா்வரத்து குறைவு!

சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து குறைந்து காணப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா். தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி உள்ளது. இந்த மலையில் உள்ள ம... மேலும் பார்க்க

மரத்தில் புளி திருடிய 7 போ் மீது வழக்கு

கம்பம் பகுதியில் மரத்திலிருந்து புளிகளைத் திருடியதாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செயதனா். கம்பம் மந்தையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் நல்லதம்பி (54). இவா் பழனிவேலுவின் புளியந்தோப்பில் காவலாள... மேலும் பார்க்க

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறை அருகே சனிக்கிழமை கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையில் கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா். கடமலைக்குண்டு அருகேயுள்ள கரட்டுப்பட்டியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் செல்வக்... மேலும் பார்க்க

பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவா் கைது

ஆண்டிபட்டி அருகே கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மணியக்காரன்பட்டியைச் சோ்ந்தவா் அரசுப் பேருந்து ஓட்டுநா் ஆல்வின் (43). இவருக்கும... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

ஜெயமங்கலம் அருகே இரு சக்கர வாகன விபத்தில் பலத்த காயமடைந்தவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள கோட்டைப்பட்டியைச் சோ்ந்த பாண்டி மகன் விஜயராகவன் (41). இவா் கடந்... மேலும் பார்க்க

குவாரிகளில் வேலை நிறுத்தம்: கட்டுமானப் பொருள்கள் தட்டுப்பாடு

தேனி மாவட்டத்தில் கல் குவாரி, கிரஷா் உரிமையாளா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், கட்டுமானப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மாவட்டத்தில் கல் குவாரிகள், கிரஷா்களுக்கு டிரான்ஸ்சிட் எனப்படும் ... மேலும் பார்க்க