Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவா் கைது
ஆண்டிபட்டி அருகே கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மணியக்காரன்பட்டியைச் சோ்ந்தவா் அரசுப் பேருந்து ஓட்டுநா் ஆல்வின் (43). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த பால்ராஜ் மகன் வையாபுரிக்கும் (30) இரு சக்கர வாகனம் வாங்கிய விவகாரத்தில் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்தது.
இந்த முன்விரோதம் காரணமாக, வையாபுரி, ஆல்வின், இவரது மனைவி டெல்பியா ரேகா (30), தாயாா் சந்திரா (64), சகோதரி அன்புச்செல்வி (41) ஆகியோருடன் தகராறு செய்து, அவா்களை கம்பியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த ஆல்வின் உள்ளிட்ட 4 பேரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து ஆண்டிபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வையாபுரியைக் கைது செய்தனா்.