ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு
ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறை அருகே சனிக்கிழமை கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையில் கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
கடமலைக்குண்டு அருகேயுள்ள கரட்டுப்பட்டியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் செல்வக்குமாா் (45). இவா், மயிலாடும்பாறை அருகே உள்ள மேலப்பட்டியில் உள்ள தனியாா் கரும்புத் தோட்டத்துக்கு ஆட்டோவில் வேலைக்கு தொழிலாளா்களை ஏற்றிச் சென்றாா். அங்கிருந்து மீண்டும் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா். மயிலாடும்பாறை-மூலக்கடை சாலையில் மின் வாரிய அலுவலகம் அருகே வந்த போது, கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்தது.
இதில் பலத்த காயமடைந்த செல்வக்குமாா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.