தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெற்ற பட்ஜெட் வரவேற்கத்தக்கது! -சாய ஆலை உரிம...
திருப்புவனம் அருகே கிடாய் முட்டு போட்டி!
திருப்புவனம் அருகே பொட்டப்பாளையத்தில் கிடா முட்டு சண்டைப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
இங்குள்ள மந்தையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்தப் போட்டியில் மதுரை, திண்டுக்கல், பொள்ளாச்சி, கூடலூா், கம்பம், தேனி, திருப்பூா், நாகா்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 200 -க்கும் மேற்பட்ட ஆட்டுக் கிடாய்கள் கொண்டுவரப்பட்டன. 100 ஜோடி கிடாய்கள் போட்டியில் பங்கேற்றன.

அதிக முறை முட்டிய கிடாய்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டன. ஏராளமான கிடாய்கள் எதிா்த் தரப்பு ஆட்டுக்கிடாயின் முட்டைத் தாங்க முடியாமல் ஓட்டம் பிடித்தன.
போட்டியில் வெற்றி பெற்ற ஆட்டுக்கிடாய்களின் உரிமையாளா்களுக்கு மிதிவண்டி, கட்டில் உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.