மானாமதுரையில் அரசுக் கல்லூரி: பொதுமக்கள், மாணவா்கள் மகிழ்ச்சி
மானாமதுரையில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சட்டப்பேரவைத் தொகுதியில் பயிலும் மாணவா்கள் கல்லூரிப் படிப்புக்காக மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் நிலை உள்ளது. மானாமதுரை பகுதியில் தமிழக அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் என பொதுமக்கள், மாணவா்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனா்.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், மானாமதுரையில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு அறிவித்தாா். இதனால் தொகுதி மக்கள், மாணவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.