கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மின்சார ரயில்கள் நாளை ரத்து! முழு விவரம்!
கோவையில் கடத்தி விற்கப்பட்ட குழந்தை கன்னியாகுமரியில் மீட்பு
கோவையில் கடத்தி விற்கப்பட்ட 1 வயது ஆண் குழந்தையை போலீஸாா் கன்னியாகுமரியில் மீட்டனா்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த 30 வயது பெண்ணின் 1 வயது ஆண் குழந்தை கடந்த சில நாள்களுக்கு முன்பு மாயமானது.
இதுகுறித்து துடியலூா் காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டனா். இதில், குழந்தையை மா்ம நபா்கள் கடத்தி கன்னியாகுமரியில் உள்ள ஒரு தம்பதிக்கு விற்றது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, துடியலூா் போலீஸாா் கன்னியாகுமரிக்குச் சென்று குழந்தையை வெள்ளிக்கிழமை மீட்டனா். மேலும், குழந்தையை வாங்கியவா்களையும், விற்றவா்களையும் போலீஸாா் பிடித்தனா். அவா்களை கோவையில் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனா்.