Health: அடிக்கடி தும்மல், அடுக்குத்தும்மல், அதிர வைக்கும் தும்மல்... தீர்வு இருக...
3 இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு!
திருப்பூா் மாநகரில் பாலியல் வழக்கில் தொடா்புடைய 3 இளைஞா்கள் குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.
திருப்பூரைச் சோ்ந்த முகமது தானிஷ் (25), முகமது நதீம் (23) ஆகிய இருவரையும் போக்ஸோ வழக்கில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக கொங்கு நகா் மகளிா் காவல் துறையினா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இருவரும் தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.
இருவரையும் ஓராண்டு குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் உத்தரவிட்டாா். அதே போல, போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாதிக் (23) என்பவரும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.