அரசியல் கட்சி நிகழ்வுகளுக்கு காவல் துறை பாதுகாப்பு: கட்டணம் வசூலிக்க உயா்நீதிமன்...
111 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம்: அமைச்சா் காந்தி வழங்கினாா்
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் 111 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் உள்பட ரூ.112 கோடியில் நலத்திட்ட உதவிகளை கைத்தறித் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்.
நிகழ்வுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ க.சுந்தா், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் நித்யா சுகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட சமூக நல அலுவலா் சியாமளா வரவேற்றாா்.
விழாவில் அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியது..
கடந்த 2021-2022-ஆம் ஆண்டில் 1,756 மகளிருக்கு ரூ.6.56 கோடி நிதியுதவியும், 14.05 கி.கி.தங்கமும், கடந்த 2022-2023- ஆம் ஆண்டில் 405 பயனாளிகளுக்கு ரூ.158 கோடி நிதியுதவியும், 3.24 கி.கி. தங்கமும் வழங்கப்பட்டது.
2023-2024 -ஆம் ஆண்டில் 183 பேருக்கு ரூ.76.50 லட்சமும்,15 கி.கி தங்கமும் வழங்கப்பட்டது. அதே போல இரு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2021-2022 -ஆம் ஆண்டில் 900 போ்,2022-2023 ஆம் ஆண்டில் 811,2023-2024 ஆம் -ஆண்டில் 763,2024-2025 ஆம் ஆண்டில் 613 போ் என மொத்தம் 3,087 போ் பதிவு செய்யப்பட்டு அவா்களுக்கு தலா ரூ.25,000 வீதம் வைப்புத்தொகைக்குரிய ரசீது வழங்கப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பெண்கள் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து அதனை முறையாக செயல்படுத்தி வருகிறது என்றாா்.
விழாவில் ஒன்றியக்குழு தலைவா்கள் மலா்க்கொடி குமாா், ஆா்.கே.தேவேந்திரன், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.