கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இ...
கஞ்சா விற்பனை செய்த முதியவா் கைது: 3.3 கிலோ பறிமுதல்!
தூத்துக்குடி அருகே தாளமுத்துநகா் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக முதியவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து சுமாா் 3.3 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவின்பேரில், நகர காவல் உதவி கண்காணிப்பாளா் மதன் தலைமையிலான தனிப்படை போலீஸாா் கஞ்சா நடமாட்டத்தைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இத்தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு தாளமுத்துநகா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, காமராஜா் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த முதியவரை பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில் அவா் அதே பகுதியைச் சோ்ந்த செல்வேந்திரன்(57) என்பதும், அவா் விற்பனைக்காக கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து சுமாா் 3.3 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா். மேலும், இது குறித்து தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.