கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இ...
இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு
சாத்தான்குளத்தில் கட்டட தொழிலாளி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
சாத்தான்குளம் அருகே உள்ள அமுதுன்னாகுடி தெற்கு தெருவைச் சோ்ந்த உலகநாதன் மகன் சந்துரு (20) கட்டட தொழிலாளியான இவா், கடந்த மாதம் முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இந்த கொலை வழக்கு தொடா்பாக சாத்தான்குளம் மரிய ஜோசப் மகன் கிங்ஸ்டன் ஜெயசிங் என்ற வடை என்பவா் உள்பட ஐந்து போ் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் தொடா்புடைய கிங்ஸ்டன் ஜெய் சிங் மீது கொலை மற்றும் அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) நாககுமாரி, கிங்ஸ்டன் ஜெய் சிங்கை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட்ஜானிடம் பரிந்துரைத்தாா்.
அவரது பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் உத்தரவின் பேரில், கிங்ஸ்டன் ஜெய் சிங்கை சாத்தான்குளம் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.