கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இ...
திருச்செந்தூா் அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமை!
திருச்செந்தூா் அருகே வீரபாண்டியன்பட்டணம் கடற்கரையில் சுமாா் 10 கிலோ எடை கொண்ட 2.5 அடி நீளமுடைய சிறிய ஆமை இறந்த நிலையில் சனிக்கிழமை கரை ஒதுங்கியது.
வீரபாண்டியன்பட்டணம் கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை காலை இறந்து கிடந்த ஆமையை கடற்கரை பாதுகாப்பு பணியாளா் ஜான் சிவராஜா எடுத்து, திருச்செந்தூா் அரசு கால்நடைத் துறை மருத்துவமனையில் ஒப்படைத்தாா்.

இந்த ஆமை ஆலிவ் ரெட்லி வகையை சோ்ந்தது என்றும், திருச்செந்தூா் முதல் ராமேசுவரம் கடலில் அதிகளவில் காணப்படும் இனம் என்றும் மருத்துவா் தெரிவித்தாா்.
தற்போது ஆமைகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால், இந்த ஆமை முட்டை இடுவதற்காக கரை ஒதுங்கும் போது அலைகளின் சீற்றத்தால் அடிபட்டோ அல்லது பாறைகளில் வேகமாக மோதியதால் காயமடைந்தோ அல்லது மீன்பிடி படகுகளில் மோதியோ இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.