புதுக்கடை: தொழிலாளியைத் தாக்கியதாக ஒருவா் மீது வழக்கு!
புதுக்கடை அருகேயுள்ள முன்சிறை பகுதியில் தொழிலாளியைத் தாக்கியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியைச் சோ்ந்த மோகானந்தன் நாயா் மகன் மோகன் (32). தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த மணியன் மகன் ஐயப்பன் (44) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாம்.
பைங்குளம் பகுதியில் சனிக்கிழமை நின்றிருந்த மோகனை ஐயப்பன் தாக்கியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். புகாரின்பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.