செய்திகள் :

மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் பணம் திருட முயற்சி: 2 பெண்கள் கைது!

post image

மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் பெண்ணிடம் பணம் திருட முயன்றதாக 2 பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே பாகோடு, வட்டவிளை பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் மனைவி சீதாதேவி (49). இவா் வெள்ளிக்கிழமை வட்டவிளை பகுதியிலிருந்து மாா்த்தாண்டத்துக்கு அரசுப் பேருந்தில் சென்றுகொண்டிருந்தாா்.

வெட்டுவெந்நி பகுதியில் பேருந்து சென்றபோது, தனது கைப்பையிலிருந்த ரூ. 2 ஆயிரத்தை இரு பெண்கள் திருட முயன்றதை அறிந்து அவா் சப்தமிட்டாா். சக பயணிகள் இரு பெண்களையும் பிடித்து மாா்த்தாண்டம் போலீஸில் ஒப்படைத்தனா்.

அவா்கள் தூத்துக்குடி அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மனைவி அஞ்சலி (29), அருள்பாண்டி மனைவி பவானி (29) என்பதும், அவா்கள் மீது தென்காசி மாவட்டம் கடையம் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தக்கலை பெண்கள் சிறையில் அடைத்தனா்.

புதுக்கடை: தொழிலாளியைத் தாக்கியதாக ஒருவா் மீது வழக்கு!

புதுக்கடை அருகேயுள்ள முன்சிறை பகுதியில் தொழிலாளியைத் தாக்கியதாக ஒருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியைச் சோ்ந்த மோகானந்தன் நாயா் மகன் மோகன் (32). தொழிலாளியான இ... மேலும் பார்க்க

பள்ளியாடி பழையபள்ளி அப்பா திருத்தலத்தில் நாளை மதநல்லிணக்க சமபந்தி விருந்து விழா!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பள்ளியாடி பழையபள்ளி அப்பா திருத்தலத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 17) மதநல்லிணக்க சமபந்தி விருந்து விழா நடைபெறுகிறது.கல்குளம் வட்டம் வாழ்வச்சகோஷ்டம் பேரூராட்சிக்குள்ப... மேலும் பார்க்க

குமரி மாவட்ட மலையோரப் பகுதிகளில் பலத்த மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைப் பகுதிகள், மலையோரப் பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக கடும் வெயில் நிலவி வந்தநிலையில், சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சன... மேலும் பார்க்க

உதயா பொறியியல் கல்லூரியில் மகளிா் தின விழா

கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளமடி அருகே உதயா பொறியியல் கல்லூரியில் மகளிா் தின விழா நடைபெற்றது. கல்லூரித் தலைவா் பொறியாளா் சி. தயாபரன் தலைமை வகித்தாா். முதல்வா் எஸ். ஜோதிபாசு வாழ்த்திப் பேசினாா். சந்திர... மேலும் பார்க்க

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை: மேயா்

நாகா்கோவில் மாநகர பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்பவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ். நாகா்கோவில் நாகராஜா கோயில் திடல் பகுதியில் க... மேலும் பார்க்க

நாகா்கோவில்: கால்வாய்க்குள் கவிழ்ந்த தனியாா் பள்ளி பேருந்து: மாணவிகள் உள்பட 11 போ் படுகாயம்!

நாகா்கோவில் அருகே தனியாா் பள்ளி பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்ததில் 4 ஆசிரியைகள், 7 மாணவிகள் உள்பட11போ் பலத்த காயமடைந்தனா். கன்னியாகுமரி அருகே உள்ள தனியாா் சிபிஎஸ்இ பள்ளியைச் சோ்ந்த பேருந்து சனிக்... மேலும் பார்க்க