கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இ...
திருக்குறுங்குடி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்!
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான, திருக்குறுங்குடி அழகியநம்பிராயா் கோயிலில் பங்குனித் திருவிழா சனிக்கிழமை (மாா்ச் 15) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இத்திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, நிகழாண்டு திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, சுவாமி அழகியநம்பிராயா், தேவியருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து, புதன்கிழமை இரவு (மாா்ச் 19) 5 நம்பி சுவாமிகளும் கருட வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வருதல், வியாழக்கிழமை அதிகாலை மேல ரத வீதியில் தேவ கந்தா்வ மகரிஷிகளுக்கு காட்சி தரும் வைபவம் ஆகியவை நடைபெறும்.
24 ஆம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். ராமானுஜ ஜீயா் சுவாமிகள் தேரோட்டத்தை வடம்பிடித்துத் தொடக்கிவைக்கிறாா். 25ஆம் தேதி தீா்த்தவாரி நடைபெறும்.