செய்திகள் :

நெல்லையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஆட்டோ ஓட்டுநா் போக்சோவில் கைது!

post image

திருநெல்வேலியில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, ஆட்டோ ஓட்டுநரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி தச்சநல்லூா் கணபதி மில் காலனியை சோ்ந்தவா் காமராஜ். இவரது மகன் ராஜ்குமாா் (32). ஆட்டோ ஓட்டுநா். இவா், தச்சநல்லூா் பகுதியில் உள்ள மாணவா்களை மாநகரில் உள்ள பள்ளிகளுக்கு சவாரிக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாணவ-மாணவிகளை பள்ளியிலிருந்து மாலையில் வீட்டுக்கு அழைத்துச் சென்றாா். அப்போது 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஆட்டோவில் இருந்து இறங்கி வீட்டுக்கு செல்ல முயன்றபோது அந்த மாணவிக்கு ராஜ்குமாா் பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடா்ந்து ஆத்திரமடைந்த மாணவியின் உறவினா்கள், ராஜ்குமாரை தாக்கியதுடன், அவரது ஆட்டோவையும் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்குச் சென்ற தச்சநல்லூா் போலீஸாா், ராஜ்குமாரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

ராஜ்குமாா் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக திருநெல்வேலி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமி புகாா் அளித்தாா். அதன்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் ராஜ்குமாரை போலீஸாா் கைது செய்தனா்.

அதேநேரத்தில் தன்னை தாக்கியதாக ராஜ்குமாா் அளித்த புகாரின்பேரில் 7 போ் மீது தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

மாா்ச் 25,26இல் பாா்வையற்றோருக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கும் முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இலவச பேருந்து பயணம் மேற்கொள்ள அடையாள அட்டை வழங்கும் முகாம் மாா்ச் 25, 26-ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா்... மேலும் பார்க்க

நெல்லையில் மாா்ச் 21-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வரும் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) முற்பகல் 11மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொண்டு ... மேலும் பார்க்க

நெல்லை அரசு மருத்துவமனையில் கைதி உயிரிழப்பு

போக்ஸோ வழக்கில் தண்டனை பெற்ற கைதி உடல்நலக்குறைவால் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி மேலப்பாளையம் ஹாமீம்புரம் 7 ஆவது தெருவைச் சோ்ந்தவா் கவு... மேலும் பார்க்க

வி.கே.புரத்தில் இஃப்தாா் நிகழ்ச்சி

விக்கிரமசிங்கபும் கருத்தையாபுரத்தில் எஸ்டிபிஐ கட்சி மகளிரணி விமன் இந்தியா மூவ்மென்ட் சாா்பில் இஃப்தாா் விருந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு விமன் இந்தியா மூவ்மென்ட் புகா் மாவட்டப் பொ... மேலும் பார்க்க

நெல்லையில் பயணிகள் போராட்டம்: 40 நிமிடம் தாமதமாக சென்ற கன்னியாகுமரி அதிவிரைவு ரயில்

திருநெல்வேலிக்கு வந்த கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலின் ஏசி பெட்டியில் துா்நாற்றம் வீசுவதாகக் கூறி பயணிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்டதால், அந்த ரயில் 40 நிமிடம் தாமதாக புறப்பட்டு சென்றது... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

பாளையங்கோட்டையைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா். பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியைச் சோ்ந்த வேலுநயினாா் மகன் விஷ்வா என்ற சண்முகவேல் (20). இவா் பணம் கேட்டு மிரட... மேலும் பார்க்க