மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் சனிக்கிழமைமுதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் அனுமதி அளித்தனா்.
மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதிகளில் சில நாள்களாக பலத்த மழை பெய்ததால், அம்பாசமுத்திரம் வனச் சரகத்துக்குள்பட்ட மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்தது.
இதனால், அருவியில் குளிக்க கடந்த புதன்கிழமைமுதல் (மாா்ச் 12) தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், சனிக்கிழமை நீா்வரத்து சீரானதால், சூழல் சுற்றுலா வரும் பொதுமக்கள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.