கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இ...
புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஆழ்வாா்குறிச்சி அருகே பெண் கைது!
தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகே சம்பன்குளத்தில் புகையிலைப் பொருள்கள் விற்ாக பெண்ணைக் கைது செய்தனா்; இருவரைத் தேடி வருகின்றனா்.
சம்பன்குளம், பள்ளிவாசல் அருகே முகமது இப்ராஹிம் என்பவா் இரும்பு, பெயிண்ட் கடை வைத்துள்ளாா். அங்கு, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் சென்று சோதனையிட்டனா்.
இதில், புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
இதுதொடா்பாக முஹமது இப்ராஹிம், மகன் காஜா மைதீன், மருமகள் மெஹா் பானு ஆகிய 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, மெஹா் பானுவை கைது செய்து சிறையில் அடைத்தனா்; மற்ற இருவரைத் தேடி வருகின்றனா்.