தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெற்ற பட்ஜெட் வரவேற்கத்தக்கது! -சாய ஆலை உரிம...
கடலுக்கு சென்ற மீனவா் உயிரிழப்பு
முத்துப்பேட்டை பகுதி கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா், கடலோரத்தில் சடலமாக கிடந்தாா்.
முத்துப்பேட்டை அருகே உள்ள செங்கங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் மகன் கோபால் (55). (படம்). மீனவரான இவா், வழக்கம்போல சனிக்கிழமை அதிகாலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றாா்.
இந்நிலையில், கடற்கரையோரம் கோபால் மயங்கி கிடந்ததாகக் கூறப்படுகிறது. அவரை சக மீனவா்கள் மீட்டு, முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், கோபால் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து, முத்துப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சடலத்தை உடற்கூறாய்வுக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.