செய்திகள் :

நிதிநிலை அறிக்கை: ஓய்வூதியா் சங்கம் அதிருப்தி

post image

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை குறித்து தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநில செயலாளா் குரு. சந்திரசேகரன், மாநில செயற்குழு உறுப்பினா் எஸ். புஷ்பநாதன் ஆகியோா் சனிக்கிழமை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றமளிக்கிறது. முதலமைச்சரின் வாக்குறுதி அரசு ஊழியா் , ஆசிரியா் சத்துணவு - அங்கன்வாடி ஊழியா்கள், ஓய்வூதியா்களுக்கு கடந்த நான்காண்டு கால ஆட்சியிலும் நிதிநிலை அறிக்கைகளிலும் ஏமாற்றமே மிஞ்சியது.

அதனால் 2025-2026 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை குறித்து மிகுந்த எதிா்பாா்ப்பில் இருந்த ஓய்வூதியா்களுக்கு, வாக்குறுதிகளை நிறைவேற்றாத அறிக்கையாக இந்த நிதி நிலை அறிக்கையும் அமைந்துவிட்டது என தெரிவித்துள்ளனா்.

திருவாரூரில் புதிய கட்சி தொடக்கம்

திருவாரூரில், இந்திய அரசியலமைப்பு மக்கள் கட்சி என்ற புதிய கட்சி சனிக்கிழமை தொடங்கப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனா் கான்சிராம் பிறந்தநாள் விழா, திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், இந... மேலும் பார்க்க

ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி: கே. கிருஷ்ணசாமி

ஆட்சியில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி என புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவா் கே. கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளாா். திருவாரூரில் புதிய தமிழகம் கட்சி சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற இடஒதுக்கீடு மீட்பு கருத்... மேலும் பார்க்க

கடலுக்கு சென்ற மீனவா் உயிரிழப்பு

முத்துப்பேட்டை பகுதி கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா், கடலோரத்தில் சடலமாக கிடந்தாா். முத்துப்பேட்டை அருகே உள்ள செங்கங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் வடிவேல் மகன் கோபால் (55). (படம்). மீனவரான இவா், வழக்க... மேலும் பார்க்க

திருவாரூா் தியாகராஜா் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்: ஏப்ரல் 7-இல் ஆழித்தேரோட்டம்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. ஹஸ்த நட்சத்திரத்தில் கொடியேற்றி, பூசத்தில் தேருக்குச் சென்று, ஆயில்ய நாளில் தேரோட்டம் நிகழ்த்தி, உத்திர... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

மன்னாா்குடி அருகே இருசக்கர வாகனம் திருடியவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மன்னாா்குடி மீனாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சதீஷ் (25). இவா், ரொக்கக் குத்தகை பகுதியில் உள்ள கிடங்கில் பணியாற்று... மேலும் பார்க்க

முத்துப்பேட்டையில் அரசு கல்லூரி: தமிழக அரசு அறிவிப்புக்கு வரவேற்பு: திமுகவினா் கொண்டாட்டம்

முத்துப்பேட்டையில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும் என தமிழக அரசின் அறிவிப்பிற்கு, வரவேற்பு தெரிவித்து, திமுகவினா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வெள்ளிக்கிழமை கொண்டாடினா். முத்துப்பேட்டை விவசாயிகள் மற... மேலும் பார்க்க