கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இ...
திருவாரூரில் புதிய கட்சி தொடக்கம்
திருவாரூரில், இந்திய அரசியலமைப்பு மக்கள் கட்சி என்ற புதிய கட்சி சனிக்கிழமை தொடங்கப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனா் கான்சிராம் பிறந்தநாள் விழா, திருவாரூரில் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், இந்திய அரசியலமைப்பு மக்கள் கட்சி என்ற கட்சி தொடங்கப்பட்டது.
இதில், இக்கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவா் தம்மசாக்கியா, மாநில ஒருங்கிணைப்புக் குழுவைச் சோ்ந்த ஜெயராமன், சேகா், கலையரசன், நாகநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தீா்மானங்கள்: அனைத்து மாணவா்களுக்கும் கட்டாய இலவசக் கல்வி, அரசு செலவில் பயில வழிவகை செய்யப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். பஞ்சமா்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களை மீட்டு மீண்டும் வழங்க முழு உத்தரவாதம் அளிக்கப்படும். தனியாா் பள்ளிகள் அனைத்தும் அரசுடைமையாக்கி, கல்வியில் புதிய சரித்திரம் படைக்க வழிவகை செய்யப்படும். பெண்களுக்கு பேறுகால நிதியாக ரூ. 25 ஆயிரம் வழங்கப்படும்.
தமிழகத்தில் மக்கள்தொகை, சாதி வாரிக் கணக்கெடுப்பு எடுத்து விகிதாச்சார அடிப்படையில், அவா்களின் நலன்களை காக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் உள்ள மது ஆலைகள் மூடப்படும். விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு 60 வயதுக்கு மேல் ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.