செய்திகள் :

ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன்? பாஜக கேள்வி!

post image

ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணங்கள் பற்றிய அரசியல் குற்றச்சாட்டுகள் பாஜகவினரால் எப்போதும் வைக்கப்படும். ராகுல் உள்நாட்டு அரசியலுக்கு தகுதியற்றவர் என சித்தரிக்கும் விதமாக பாஜகவினர் அவரை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், கர்நாடக அரசு அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பத்திரிகையாளர் சந்திப்பில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசினார். அப்போது, “ராகுல் காந்தி எங்கே? அவர் வியட்நாம் சென்றதாக நான் கேள்விப்பட்டேன்.

புத்தாண்டு தொடக்கத்தின்போது ராகுல் காந்தி வியட்நாமில் இருந்தார். அங்கு 22 நாள்கள் தங்கியிருந்தார். அவருடைய சொந்தத் தொகுதியில் கூட அவர் இவ்வளவு நாள்கள் தங்கியதில்லை. திடீரென வியட்நாம் மீது அவருக்கு இந்தளவு விருப்பம் வரக் காரணம் என்ன?

இதையும் படிக்க | அமெரிக்காவில் ஹமாஸ் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற இந்திய மாணவியின் விசா ரத்து!

எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி இந்தியாவில் இருக்கவேண்டும். வியட்நாம் மீது அவர் கொண்டுள்ள அளவில்லா பாசம் குறித்து அவர் விளக்கம் தர வேண்டும். அங்கு அவர் தொடர்ந்து செல்வது குறித்து அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறது” என்று பேசினார்.

பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் தலைவரான அமித் மால்வியா தனது எக்ஸ் தளப் பக்கத்தில், “ராகுல் காந்தி அடிக்கடி மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து காங்கிரஸ் தெளிவுபடுத்த வேண்டும். ஆனால் அதன் விவரங்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்கப்படுவதில்லை.

எதிர்க்கட்சித் தலைவராக, ராகுல் காந்தி ஒரு முக்கிய பதவியை வகிக்கிறார். அவர் அடிக்கடி மேற்கொள்ளும் ரகசிய வெளிநாட்டுப் பயணங்கள் குறிப்பாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறும் போது அவர் இவ்வாறு சென்றிருப்பது நாட்டின் பாதுகாப்பு பற்றி கடுமையான கேள்விகளை எழுப்புகின்றது” எனப் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிக்க | பாகிஸ்தான் உள்பட 41 நாடுகளின் குடிமக்களுக்கு பயணத் தடையா? டிரம்ப் சொல்வது என்ன?!

ராகுல் காந்தியின் தனிப்பட்ட பயணங்களை அரசியலாக்குவது குறித்து குற்றம் சாட்டிய காங்கிரஸ் கட்சி ஒரு தனிநபராக அவருக்கு வெளிநாடு செல்ல உரிமை உண்டு என்று கூறியுள்ளது.

கடந்த டிசம்பர் 26 அன்று முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் தலைவருமான மன்மோகன் சிங்கின் மறைவைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் வியட்நாம் பயணம் பாஜகவின் விமர்சனத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தேசியக் கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயமாக்கப்படவில்லை: பவன் கல்யாண்

தேசியக் கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயமாக்கப்படவில்லை என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். ஹிந்தியையும் மாநில மொழிகளையும் மையப்படுத்தி தேசிய அளவில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேசியக் கல்விக் கொ... மேலும் பார்க்க

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சட்டக் கல்லூரி மாணவன்: பெண் பலி!

குஜராத்தில் குடிபோதையில் கார் ஓட்டிய சட்டக் கல்லூரி மாணவன் ஏற்படுத்திய விபத்தில் பெண் ஒருவர் பலியானார். குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவன் ரக்‌ஷித் சௌரசியா (20). இவர் நேற்று முன்த... மேலும் பார்க்க

தங்கம் கடத்தல்: விசாரணையில் அடித்து துன்புறுத்தப்பட்டேன்! -நடிகை ரன்யா ராவ்

தங்கம் கடத்தல் வழக்கு விசாரணையில் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக காவல் துறை அதிகாரிகள் மீது நடிகை ரன்யா ராவ் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். கன்னட நடிகை ஹர்ஷவர்தினி ரன்யா(ரன்யா ராவ்) வெளிநாடு... மேலும் பார்க்க

பஞ்சாபில் கோயில் மீது மர்ம நபர்கள் கையெறி குண்டு வீச்சு

அமிர்தசரஸில் உள்ள கோயில் மீது மர்ம நபர்கள் கையெறி குண்டை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸின் கந்த்வாலா பகுதியில் உள்ள தாகுர்த்வாரா கோயில் மீது சனிக்கிழமை அதிகாலை இரு... மேலும் பார்க்க

உ.பி: படகு கவிழ்ந்ததில் 3 பேர் நீரில் மூழ்கி பலி

உத்தரப் பிரதேசத்தில் 16 பேருடன் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள். உத்தரப் பிரதேச மாநிலம், ரத்தன்கஞ்ச் கிராமத்தில் உள்ள சர்தா ஆற்றில் 16 பேருடன் சென்ற படகு சனிக்கிழமை கவிழ்ந்தது.... மேலும் பார்க்க

தலைகீழாக நெருப்பில் தொங்கவிட்டு சடங்கு: 6 மாதக் குழந்தை பார்வை இழந்த பரிதாபம்!

மத்திய பிரதேசத்தில் 6 மாதக் குழந்தையை தலைகீழாக நெருப்பில் தொங்கவிட்டு சடங்கு செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 13ல் கோலாரஸ் காவல் நிலையத்திற்குள்பட்ட பகுதியில் இந்த அதிர... மேலும் பார்க்க