தேசியக் கல்விக் கொள்கையில் ஹிந்தி கட்டாயமாக்கப்படவில்லை: பவன் கல்யாண்
திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி!
திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிகாக கூடுதல் வாகனம் நிறுத்துமிடம் வசதி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்திசெய்யும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில்வாகனம் நிறுத்துமிடம் வசதிகளை விரிவுபடுத்தியுள்ளது.
திருமங்கலம் மெட்ரோ நிலையத்தின் துணைகட்டிடத்திற்கு அருகில் தற்போதுள்ள B2 வாகன நிறுத்தும் பகுதியில் கூடுதலாக ஒரு தளம் வாகன நிறுத்தும்(Mezzanine level parking) இடமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதுப்பிக்கப்பட்ட வாகனம்நிறுத்துமிடத்தில் கூடுதலாக 400 இருசக்கர வாகனங்களை நிறுத்த முடியும்.
தற்போது, திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தின் B2 வாகனம் நிறுத்துமிடம் 1,000இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதியைக் கொண்டுள்ளது. இந்த புதிய விரிவாக்கம் பயணிகளுக்குகூடுதல் வசதியை வழங்கி, மெட்ரோ சேவையை மேலும் எளிமையாகவும் திறம்படவும் பயன்படுத்தஊக்குவிக்கும்.
பாலியல் குற்றங்களின் மையமாகும் ஹம்பி! வெளிநாட்டுப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்!
மேம்படுத்தப்பட்ட இந்த வாகன நிறுத்துமிடத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின்தலைமை ஆலோசகர் (இயக்கம் மற்றும் பராமரிப்பு) பி. கோபிநாத் மல்லியா திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் ஆலோசகர் (மின்சாரம் மற்றும் இயந்திரவியல்), எஸ்.கே.நடராஜன், கூடுதல் பொது மேலாளர் (மெட்ரோ இரயில் மற்றும் இயக்கம்) எஸ். சதீஷ் பிரபுமற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.