Viduthalai Part 2: ``விருப்பு வெறுப்பில்லாமல் ராஜா சார் செய்த செயல்... " - வெற்ற...
அணியில் மாற்றமில்லை..!லபுஷேன் மீண்டு வருவார்! ஆஸி. தலைமைப் பயிற்சியாளர் பேட்டி!
இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான முதல் பார்டர் - கவாஸ்கர் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 2ஆவது டெஸ்ட் டிச.6ஆம் தேதி தொடங்குகிறது.
இந்திய அணியில் ரோஹித், கில் இடம்பெறுவார்கள். அவர்களுக்குப் பதிலாக படிக்கல், ஜுரெல் அணியில் வெளியேற்றப்படலாம்.
ஆஸி.யின் மார்னஸ் லபுஷேன் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். கடைசி 41 இன்னிங்ஸில் ஒரே சதம் அடித்து 30 சராசரி உடன் விளையாடி வருகிறார்.
முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அணி இவ்வளவு மோசமாக தோற்றதில்லை.
மன உறுதியுடன் ஆஸி. வீரர்கள்
ஆனாலும் 2ஆவது டெஸ்ட்டில் ஆஸி. அணியில் எந்தவித மாற்றமும் இருக்காது என ஆஸ்திரேலியாவின் தலைமைப் பயிற்சியாளர் ஆண்ட்ரூவ் மெக்டொனால்ட் கூறியுள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
அடிலெய்ட் டெஸ்ட்டிலும் அதே வீரர்கள்தான் இருப்பார்கள். உலகத்தில் எங்கு சென்றாலும் அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறுதான் அணி வீரர்களை தேர்வு செய்யவேண்டும்.
மிட்செல் மார்ஷ் சிறிது குறைவான செயல்பாடுகளைதான் வழங்கியிருக்கிறார். ஆனால், முதல் இன்னிங்ஸில் திருப்தியான செயல்பாடுகளை தந்தார்.
வீரர்களிடம் மன உறுதி இருக்கிறது. வெற்றி, தோல்விகளில் இந்த அணி சிறப்பான அணியாகவே எனக்கு தோன்றுகிறது. சமநிலையான அணி. இந்த சமநிலைக்கு பக்கத்தில்தான் எங்கேயோ இருக்கிறோம்.
லபுஷேன் மீண்டு வருவார்
லபுஷேன் சிறப்பான ஃபார்மில் இருக்கும்போது ஆடுகளத்தில் நல்ல முனைப்பை காட்டுவார். உயர்வு, தாழ்வு என்பது ஒரு வீரரின் கிரிக்கெட் பயணத்தில் முக்கியம். தற்போது மோசமாக விளையாடுவதால் வெளியில் விமர்சனங்கள் வருகின்றன. அணியினுள் அவர் மீது நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் எதிர்பார்க்கும் வீரர் அவர். எல்லாவற்றையும் மாற்றி திரும்ப வருவார்.
பும்ராவுக்கு எதிராக எப்படி ரன்கள் அடிப்பதுதான் முக்கியமான உரையாடலாக இருக்கிறது. ஒரு நல்ல பந்தினை எப்படி டிபெண்ட் செய்வது? என்ற கேள்வி இருக்கிறது. ஆனால், பும்ராவுக்கு எதிராக அழுத்தத்தை அளித்து ரன்களை குவிக்க முய்ற்சிக்க வேண்டும் என்றார்.
இந்தியாவின் கேப்டன் பும்ரா சிறப்பாக பந்துவீசி 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதுபெற்றார்.