செய்திகள் :

அண்ணா பல்கலை. மாணவி வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்!

post image

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டாமாண்டு படித்து வரும் மாணவி, தனது ஆண் நண்பருடன் திங்கள்கிழமை இரவு கல்லூரி வளாகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்குவந்த அடையாளம் தெரியாத இருவர், மாணவரைத் தாக்கிவிட்டு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக ஞானசேகரன் (33) என்பரை காவல் துறையினர் கைது செய்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவருடன் தொடர்பில் இருந்த மற்றொரு நபரைப் பிடிக்க காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதையும் படிக்க | மாணவி பாலியல் வழக்கில் கைதானவர் திமுகவைச் சேர்ந்தவர் அல்ல: அமைச்சர் விளக்கம்!

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் திமுக அரசை குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.

உயர் நீதிமன்றம் இதனை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர் முறையிட்ட நிலையில், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வு இன்றே இந்த வழக்கை விசாரிக்கவுள்ளது.

மாணவர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு!

பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பாதுகாப்புச் சூழலை மேம்படுத்திட வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை அண... மேலும் பார்க்க

பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், ... மேலும் பார்க்க

மன்மோகன் சிங் நினைவிடம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

மன்மோகன் சிங் நினைவிடம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்மன்மோகன் சிங் நினைவிடத்திற்கு மத்திய அரசு உரிய இடத்தை தராமல் அவமதித்துவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து ... மேலும் பார்க்க

தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையால் சுற்றுலா தளமான ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் சனிக்கிழமை குவிந்தனர். தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு உள்ளது. இங்கு சேலம் மாவட்டம், மட்டும... மேலும் பார்க்க

டிச.31-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31-ஆம் தேதி வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா திறந்திருக்கும் என்று பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, யானை, ... மேலும் பார்க்க

Untitled Dec 28, 2024 04:16 pm

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை விசாரிக்க 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்தது. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் சனிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு ... மேலும் பார்க்க