செய்திகள் :

அதானி முறைகேடு: நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை! காங்கிரஸ்

post image

அதானி மீதான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

வெளிநாடுகளில் போலி நிறுவனங்கள் மூலம் கெளதம் அதானி மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பெர்க் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது அமெரிக்காவில் புதிய பிரச்னை வெடித்துள்ளது.

சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக ரூ. 2,100 கோடி லஞ்சமாக இந்திய அரசு அதிகாரிகளுக்கு அதானி கொடுத்ததாகவும், அதனை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாகவும் நியூ யார்க் நீதிமன்றத்தில் குற்ற வழக்கு பதியப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : அதானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்கு பதிவு!

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“கடந்த ஜனவரி 2023 முதல் அதானியின் பல்வேறு முறைகேடுகளை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகின்றது.

மோடி மற்றும் அவருக்கு நெருக்கமான தொழிலதிபரை இடையேயான தொடர்பு குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. ஆனால், ஒரு கேள்விக்கும் பதிலளிக்கப்படவில்லை.

இதனிடையே, 2020 முதல் 2024 இடையிலான காலகட்டத்தில் அரசு அதிகாரிகளுக்கு ரூ. 2,100 கோடி லஞ்சம் கொடுத்து ஒப்பந்தங்களை அதானியும் சாகர் அதானியும் பெற்றதாக அமெரிக்காவில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.

ரூ. 16,800 கோடி லாபம் ஈட்டக் கூடிய சூரிய ஒளி மின்சார விநியோகத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில் இந்திய அரசு அதிகாரிகளை அதானியே நேரடியாக சந்தித்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

பிரதமரின் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட மோசடி இது. அதானியின் முறைகேடுகளை விசாரிக்க வெளிநாட்டு அரசு முன்வந்துள்ளது, இந்திய நிறுவனங்கள் பாஜக அரசால் கைப்பற்றப்பட்டிருப்பதை காட்டுகிறது.

அதானியின் மிகப்பெரிய ஊழலை விசாரிக்க நம்பகத்தன்மை கொண்ட புதிய செபி தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என்பது தெளிவாகியுள்ளது. மேலும், முழு அளவிலான விசாரணையை மேற்கொள்ள உடனடியாக நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரூ. 20 லட்சம் அளித்தால் ஆண்டுக்கு ரூ. 50 லட்சம்! ஸொமாட்டோ சிஇஓ அறிவிப்பு!

ஸொமாட்டோவில் தலைமை ஊழியருக்கான வேலைவாய்ப்பை அதன் தலைமை நிர்வாக அதிகாரி அறிவித்துள்ளார்.இ-வர்த்தக நிறுவனமான ஸொமாட்டோவில் தலைமை ஊழியருக்கான பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தலைமை நிர்வாக அதிகாரி தீபிந்தர... மேலும் பார்க்க

அதானிக்கு எதிராக மாணவர் அமைப்பினர் பெருந்திரளாகப் போராட்டம்

கௌதம் அதானிக்கு எதிராக மாணவர் அமைப்பினர் தலைநகர் புதுதில்லியில் பெருந்திரளாகப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக ரூ. 2,100 கோடி லஞ்ச... மேலும் பார்க்க

தில்லியில் அரசு அலுவலகங்கள் செயல்படும் நேரம் மாற்றம்!

புதுதில்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது. தில்லியின் பெரும்பாலான இடங்களிலும், அடர்த்தியான புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுகிறது.தேசியத் தலைநகர் மற்றும் அதனையொட்டிய என்சிஆர் பகுதியில... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியில் காங்., பாஜகவிலிருந்து வந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு!

புதுதில்லி: தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் வேட்பாளர்களாக காங்கிரஸ், பாஜகவிலிருந்து வந்தவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்ப்ட்டுள்ளது. தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்... மேலும் பார்க்க

தில்லி பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி!

புது தில்லி: தில்லி பேரவைத் தேர்தல் 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே, முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது.தி... மேலும் பார்க்க

அதானி பங்குகளில் முதலீடு: எல்ஐசி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு!

அதானி பங்குகளில் முதலீடு செய்த எல்ஐசி.க்கு ஒரே நாளில் ரூ.12,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.நாட்டின் மிகப்பெரிய உள்நாட்டு முதலீட்டாளரான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் 7 நாடுகளில் தனது சொத்துகளை வைத்து... மேலும் பார்க்க